விபத்தில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி யார் தெரியுமா? இந்தியா வந்த ஒரே வாரத்தில் நேர்ந்த சோகம்

Published : Jul 26, 2021, 05:19 PM IST

நடிகை யாஷிகா நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய போது, மாமல்லபுரம் அருகே... தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தற்போது யாஷிகாவின் தோழி குறித்தும் அவர் யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

PREV
18
விபத்தில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி யார் தெரியுமா? இந்தியா வந்த ஒரே வாரத்தில் நேர்ந்த சோகம்

நேற்று முன்தினம் நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார்.  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூலேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 
 

28
Yashika anand

இதில் யாஷிகாவுடன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் நண்பர்களான சையது, ஆமீர் மற்றும் கார் ஓட்டிய யாஷிகா ஆனந்த் ஆகியோர் படுகாயங்களுடன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

38
yashika

இந்த விபத்தில் உயிரிழந்த வள்ளி செட்டி பவானி... ஹைதராபாத்தை சேர்ந்தவர். 28 வயதாகும் இவர் ஒரு சாப்ட் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது ஏற்கனவே வெளியானது.

48
yashika

அமெரிக்காவில் பணிபுரியும் இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் அங்கிருந்து இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய தோழி யாஷிகா சென்னையில் இருப்பதால் அவரை பார்க்க,  இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்துள்ளார்.

58

பார்ட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என வள்ளி ரெட்டி பவானி கூறிய போதிலும், யாஷிகாவின் வற்புறுத்துதல் காரணமாகவே நான்கு பேர் மாமல்லபுரத்தில் நடந்த நைட் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
 

68
Yashika anand

காரில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் யாஷிகா கார் ஓட்டிய போதிலும், காரில் இருந்த யாருமே முறையாக சீட் பெல்ட் அணியவில்லை. இதன் காரணமாகவே, தடுப்பு சுவரில் யாஷிகா அதிவேகமாக மோதியதும் பவானிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

78
yashika

இந்த விபத்து குறித்து வள்ளிச்செட்டி பவானியின் தந்தை கூறிய போது நாங்கள் தற்போது மகளை இழந்து உள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம் என்றும் அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் தங்களுடைய வருத்தத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.

88

இந்நிலையில் யாஷிகா இரவு நேரத்தில் கார் ஓட்டுவது போலவும், இடையில் கை தட்டி கொண்டு அவர் கார் ஓடுவதை ஒருவர் வீடியோ எடுப்பது போன்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவு வேகமாக பரவி வருகிறது. அனால் அது மகாபலிபுரத்தில் இருந்து சென்னை திரும்பும் போது எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. 

click me!

Recommended Stories