ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, அதில் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக வெள்ளித்திரையில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வந்தார்.
வழக்கமாக கண்ணை கசக்கி கொண்டு இருக்கும் சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.
இந்நிலையில் இவர் தனது கணவரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் கணவருடன் சூறாவளி பிரச்சாரமும் மேற்கொண்டார்.
சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகிய ராதிகா புன்னகையோடு... தன்னுடைய குழுவினரிடம் இருந்து விடைபெற்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். ரசிகர்கள் ராதிகாவை மிஸ் பண்ணுவதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக நடிக்க உள்ள அந்த முன்னணி நடிகை யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதன் படி, தற்போது மூன்று முன்னணி நடிகைகள் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.
வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து கலக்கிய, ரம்யா கிருஷ்ணன், மீனா, மற்றும் தேவயானி ஆகிய நடிகைகளின் பெயர் தற்போது அடிபட்டு வந்தாலும், இதுவரை யார் அடுத்து ராதிகாவின் சித்தி கதாபாத்திரமாக அவதாரம் எடுக்க உள்ளார் என்பது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.