டோரா போல் மாறிய கீர்த்தி சுரேஷ்..! சோ ஸ்வீட்... சும்மா லட்டு மாதிரி இருக்காங்களே..! வைரலாகும் புகைப்படம்!

First Published | Feb 20, 2021, 7:08 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், செம்ம கியூட்டாக டோராவை போன்ற ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது.
Tap to resize

ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் எது வெளியானாலும் அது செம்ம விரலாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் இதுவரை, யாரும் பார்த்திடாத வித்தியாசமான டோரா ஹேர் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் சும்மா கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பார்பதற்க்கே... கியூட் தேவதை போல் சிரித்தபடி உள்ள இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!