திருமணம் நடக்க தீபம் ஏற்றி பரிகாரம் செய்தாரா சிம்பு ..? வைரலாகும் புகைப்படம்..!

First Published | Feb 20, 2021, 3:08 PM IST

நடிகர் சிம்பு  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்ட பக்திமயமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பொங்கல் விருந்தாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடத்து வருகிறார். இதையடுத்து ‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள ஒரு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.
Tap to resize

இப்படி தன்னுடைய கேரியரில் சிம்பு செம்ம பிசியாக இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சிம்புவுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பது தான்.
நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து காதல் கிசுகிசுக்களில் சிக்கிய சிம்பு, தற்போது அப்பா, அம்மா ஓகே சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். அதற்காக டி.ராஜேந்தரும், உஷா ராஜேந்தரும் தீவிரமாக பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் காதலர் தினத்தன்று, அவர் வளர்த்து வரும் குப்பு என்கிற நாயிடம், எனக்கு கல்யாணம் நடக்குமா என? வேடிக்கையாக இவர் சில கேள்விகளை எழுப்பி வெளியிட்ட வீடியோ வைரலாக பரவியது.
இதை தொடர்ந்து சிம்பு, புத்தாண்டின் போது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுள்ளார். மனதில் ஏதாவது வேண்டிக்கொண்டு, கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபடுவது ஒரு பரிகாரமாகவே செய்யப்பட்டு வருகிறது.
எனவே சிம்புவும் தன்னுடைய திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி தீபம் ஏற்றி வழிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிலர், அணைத்து கோவில்களுக்கு செல்லும் சிம்பு, வாரணாசிக்கு எப்போதும் போல் புத்தாண்டிற்காக சென்று வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள் . எது எப்படி இருந்தாலும், சிம்பு மனதில் நினைத்து தீபம் ஏற்றிய விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!