நடிகை மஞ்சிமா மோகன் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆவார். இவருக்கு இவரது பெற்றோர் வைத்த பெயர் பிரியதர்ஷினி, பின்னர் இவரது தாத்தா தான் மஞ்சிமா என்கிற பெயரை இவருக்கு சூட்டி உள்ளார். இவருடைய தந்தை மோகன் ஒரு ஒளிப்பதிவாளர், இவரது தாய் கிரிஜா ஒரு நடனக்கலைஞர் ஆவார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் தான் செய்துகொண்டனர்.
பெற்றோர் இருவரும் சினிமாவில் பணியாற்றியவர்கள் என்பதால், அவர்களுடன் ஷூட்டிங்கிற்கு சென்ற மஞ்சிமாவுக்கும் சினிமாவின் மீது ஆசை வந்துவிட்டது. நடிகை மஞ்சிமா 3 வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டார். கலியூஞ்சல் என்கிற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா, 2000-ம் ஆண்டு சூப்பர் கிட்ஸ் என்கிற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த ஷோ மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால், இவருக்கு இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மறுபுறம் பட வாய்ப்புகளும் குவிய, தொடர்ந்து நடித்து வந்த மஞ்சிமா, படிப்பிலும் செம்ம ஸ்மார்ட்டாம். கேரளாவில் உள்ள நிர்மலா பவன் என்கிற பள்ளியில் தான் இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஸ்டெல்லாம் மேரிஸ் கல்லூரியில் தான் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார் மஞ்சிமா.
சென்னையில் படித்ததால் தமிழில் நன்கு பேசத் தெரிந்த மஞ்சிமாவுக்கு 2015-ம் ஆண்டு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு வடக்கன் செல்பி என்கிற மலையாள படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா. அப்படத்தின் வெற்றிக்கு பின் தமிழில் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் மஞ்சிமா.
இதையும் படியுங்கள்... வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா ஆபாச பட நடிகை மியா கலீஃபா..?
சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாவது அவ்வளவு எளிதல்ல. அந்த அரியவாய்ப்பு மஞ்சிமாவுக்கு கிடைத்தாலும், அப்படத்துக்கு பின்னர் இவரது காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த சமயத்தில் படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த மஞ்சிமா, உடல் எடை அதிகரித்து சற்று குண்டானார். அந்த சமயத்தில் தான் இவருக்கு PCOD பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் செல்லும் இடம்மெல்லாம் இவரது உடல் எடை அதிகரித்ததை பற்றி பலரும் கேட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சிமா, அதிலிருந்து மீண்டு வர மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அப்படி அவர் ரீ-எண்ட்ரி கொடுத்த படம் தான் தேவராட்டம். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா. இப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.