மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்கில்... இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.