2021 Most Tweeted Actress: நயன் லிஸ்டுலையே இல்லையே? முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ்! டாப் 10 நடிகைகள் பட்டியல்!

Published : Dec 12, 2021, 05:45 PM IST

2021 ஆம் ஆண்டு ரசிகர்களால் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகைகள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகை நயன்தாராவின் (Nayanthara) பெயர் இல்லாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த லிஸ்டில் டாப் 10 இடங்களை பிடித்த 10 பிரபல நடிகைகள் குறித்த பட்டியல் இதோ...  

PREV
110
2021 Most Tweeted Actress: நயன் லிஸ்டுலையே இல்லையே? முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ்! டாப் 10 நடிகைகள் பட்டியல்!

கீர்த்தி சுரேஷ்:

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) பெயர் தான் 2021 ஆம் ஆண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

210

பூஜா ஹெக்டே:

இரண்டாவது இடத்தில் இருப்பவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே (Pooja Hegde) தான்.

310

சமந்தா:

ட்விட்டர் தளத்தில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பெயர் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்திருப்பவர், சமீபத்தில்  தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த சமந்தா (Samantha) தான்.

410

காஜல் அகர்வால்:

இந்த லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்த பிரபலம் பிரபல நடிகை காஜல் அகர்வால் (kajal Agarwal). இவர் கர்ப்பமாக உள்ளாரா..? இல்லையா..? என பலர் தற்போது வரை கேள்வி எழுப்பி வந்தாலும் இது வரை பதில் கிடைக்கவில்லை.

510

மாளவிகா மோஹனன்:

'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோஹனன் (Malavika Mohanan) தான் இந்த டாப் 10 ட்வீட் லிஸ்டில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் தளபதிக்கு ஜோடியாக நடிக்க துவங்கியது முதலே இவருக்கு வெறித்தனமாக பல ரசிகர்களும் உருவாகி விட்டனர்.

610

ரகுல் ப்ரீத் சிங்:

6 ஆவது இடத்தில் உள்ளவர், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என ஓய்வில்லாமல் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preeth Singh) தான். அதே நேரத்தில் இவர் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், சமீபத்தில் போதை மருந்து வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சம்மன் அனுப்பி மும்பை போலீசார் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

710

சாய் பல்லவி:

இவரை அடுத்தது 7 ஆவது இடத்தில் உள்ளவர் பிரபல நடிகையான சாய் பல்லவி (Sai Pallavi) தான். இவரது நடிப்பை விட, இவரது டான்ஸுக்கு வெறித்தனமான பல ரசிகர்கள் உள்ளனர்.

 

810

தமன்னா:

8 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளவர் பாகுபலி பட நடிகையான தமன்னா (Tammannaah) தான். இவர் சமீப காலமாக பட வாய்ப்பை பிடிக்க படு ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

 

 

910

அனுஷ்கா:

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா கூட இந்த லிஸ்டில் இல்லாத நிலையில்... நீண்ட நாட்களாக படம் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கும் அஷ்கா (Anushka) இந்த பட்டியலில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

1010

அனுபமா பரமேஸ்வரன்:

அடுத்ததாக கடைசியாக 10 ஆவது இடத்தில் இருப்பவர், பிரபல இளம் நடிகையான சுருட்டை முடி அழகி அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameshwaran) தான். 

click me!

Recommended Stories