விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. சண்டை, சச்சரவுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நல்லபடியாக ஓடியுள்ளது.
முதல் வாரம் யாரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில், அடுத்த வாரம் முதல் ஆளாக ரேகா வெளியேறினார். அதன் பின்னர் வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, பாடகி சுசித்ரா, சனம் ஆகியோர் வெளியேறினர்.
அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அதிரடி காட்டினர். விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் கொளுத்தி போடும் வேலையை சிறப்பாக செய்தார்.
12 போட்டியாளர்கள் மீதமிருந்த நிலையில் டபுள் எவிக்ஷனாக ஜித்தன் ரமேஷும், அறந்தாங்கி நிஷாவும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து அனிதா, அர்ச்சனா வெளியேற்றப்பட்டனர்.
அஜீத்தை தொடர்ந்து கடைசியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷிவானி வெளியேறினார். தற்போது ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கேபி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் சேகர், ரம்யா ஆகியோர் பைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நாளை வெகு விமர்சையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெறவுள்ளது.
நேற்று இரவுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைடில் வின்னராக வருவார் எனக் கூறப்படுகிறது. இதுவரை 17 லட்சம் வாக்குகளைப் பெற்று ஆரி தான் முதலிடத்தில் உள்ளாராம்.
அவரைத் தொடர்ந்து ரன்னர் அப் ஆக பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு விகிதத்தில் பாலாஜி இரண்டாவது இடத்தில் இருந்தாலும், ரியோ தான் ரன்னர் அப் வாங்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.