பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த தொடங்கியதை அடுத்து விஜய்யுடனும் நெருக்கமாகிவிட்டாராம். ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியதை பார்த்து கடுப்பான விஜய், அவர்களையெல்லாம் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்குமாறு சொல்ல, புஸ்ஸி ஆனந்தும் அதை செய்திருக்கிறார். இதுவே விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது.