சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். குறிப்பாக தெய்வ மகள் சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சீரியலில் நடித்தபோதே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020-ம் ஆண்டு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுமையாக சினிமாவுக்கு நுழைந்துவிட்டார். அந்த வகையில் தமிழில் அவர் நடித்த முதல் முழு நீள திரைப்படமான ஓ மை கடவுளே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.