அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் விடாமுயற்சி. தடம், தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்க உள்ளார். விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதமே ரிலீஸ் ஆன போதும் இன்னும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் உள்ளது.
ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்க இருப்பதால் அதற்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட பிளான் செய்துள்ளனர். இதையடுத்து படத்தின் பின்னணி பணிகளை முடித்து படத்தை வருகிற 2024-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பிளான் போட்டுள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் கண்டிப்பாக இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.
முதலில் இப்படத்தை விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லாததால், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 68 படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விஜய்யின் தளபதி 68 படப்பிடிப்பும் அடுத்த மாதம் தான் தொடங்கப்பட உள்ளதால், இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு பின் நடிகைகள் மீது காதல் வயப்பட்ட ரஜினி, கமல், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட 6 பிரபலங்கள்!