அட்லீ குமார், இவரும் இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு தளபதி விஜய் அவர்களை வைத்து "பிகில்" என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். ஏ.ஆர் ரகுமான் இசையில் அந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் வெகுஜோராக அமைந்திருந்தது. இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட் பக்கம் சென்றிருக்கும் அட்லி, பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்களை வைத்து ஒரு ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தினுடைய Preview வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.