ஜோ முதல் நயன் வரை.. ஸ்வீட் நாயகிகளாக இருந்து, சீரும் போலீசாக மாறி மிரட்டிய டாப் கதாநாயகிகள்!

Ansgar R |  
Published : Jul 13, 2023, 05:32 PM IST

திரையுலகில் அறிமுகமான பல நாயகிகள் ஆரம்பத்தில் மென்மையான கதாபாத்திரங்கள் தான் ஏற்று நடித்திருப்பார்கள். குறிப்பாக வில்லனிடம் மாட்டும்போது, எப்போது ஹீரோ வந்து காப்பாற்றுவார் என்று காத்திருந்த நாயகிகள், பிற்காலத்தில் சீரும் போலீசாக, கம்பீரமாக நடித்த படங்கள் பல உண்டு தமிழ் திரையுலகில்.

PREV
14
ஜோ முதல் நயன் வரை.. ஸ்வீட் நாயகிகளாக இருந்து, சீரும் போலீசாக மாறி மிரட்டிய டாப் கதாநாயகிகள்!

ஜோதிகா.. சுமார் 25 ஆண்டுகளாக ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த முறையில் நடித்து வரும் ஒரு நடிகை. இவர் எந்த அளவுக்கு க்யூட் நடிகை என்பதை இவருடைய பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக நமக்கு எடுத்துக்காட்டும். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான "நாச்சியார்" என்ற திரைப்படத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மிக மிக நேர்த்தியாக நடித்திருந்தார்.பாலா இயக்கி, தயாரித்த இந்த திரைப்படம் பெரும் வெற்றி கண்டது. அதுவரை ஸ்வீட்டான நாயகி என்று போற்றப்பட்ட ஜோதிகா ஒரு கெடுபிடியான அதிகாரியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்தார். 

நானி - மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது!

24

நயன்தாரா.. தொடக்கத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கி ஐயா மற்றும் சந்திரமுகி திரைப்படங்களில் மூலம் பெரிய அளவு புகழ்பெற்ற நடிகை. தொடக்க காலங்களில் பல கிளாமர் ரோல்கள் ஏற்று நடித்தார், அதன் பிறகு நேர்த்தியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர் ஏற்கனவே "இமைக்கா நொடிகள்" திரைப்படத்தில் ஒரு சிறப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், விரைவில் அட்லீ இயக்கத்தில் வெளியாகவுள்ள ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திலும் துணிச்சலாக செயல்படும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரிஸ்க்கான சண்டை காட்சிகளும் இவருடைய நடிப்பில் ஜவான் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

34

அனுஷ்கா ஷெட்டி.. நயன்தாராவை போல இவரும் ஆரம்ப காலகட்டத்தில் பல கிளாமர் ரோல்களில் நடித்து வந்த நிலையில் அவருடைய பாகமதி என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். நயன்தாராவிற்கு முன்பாகவே, பெண்களை முன்னிலை படுத்தும்பல திரைப்படங்களில் இவர் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகமதி திரைப்படத்திற்கு முன்பும் ஒரு சில படங்களில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

44

விஜய சாந்தி.. ஆக்சன் நடிகைகளின் பட்டியலை இவர் இல்லாமல் எப்பொழுதும் தயார் செய்ய முடியாது. பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்" திரைப்படத்தின் மூலமாக 1980ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் இவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பல படங்களில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார், குறிப்பாக 1990ம் ஆண்டு வெளியான "கர்தவ்யம்" என்ற தெலுங்கு திரைப்படம் இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது. அதிலும் போலீஸ் அதிகாரியாக பல ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர் நடித்திருந்தார். தற்பொழுது பாஜகவின் முக்கிய பிரமுகராக திகழ்ந்து வரும் இவர், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

போட்ரா வெடிய... இசை நிகழ்ச்சியில் ஒன்றினையும் யுவன் - சிம்பு! எங்கு.. எப்போது தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories