Music: "இளையராஜாவையே வியக்க வைத்த பாடல் எது தெரியுமா?" – 15 வயதில் தொடங்கிய தீராத காதல்!

Published : Jan 27, 2026, 01:12 PM IST

'இசைஞானி' இளையராஜா தனது 15 வயதில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்து, கண்ணதாசன் எழுதிய "மாலை பொழுதின் மயக்கத்திலே" பாடலால் ஈர்க்கப்பட்டார். அந்தப் பாடலின் தத்துவ வரிகளையும், இசை நுணுக்கத்தையும் காலத்தால் அழியாத படைப்பு என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

PREV
15
15 வயதில் மனதை பறி கொடுத்த இளையராஜா.!

தமிழ் சினிமாவின் 'இசைஞானி' என்று போற்றப்படும் இளையராஜா, தனது இசையால் பல சாதனைகளை நிகழ்த்தியவர். இருப்பினும், அவரே வியந்து பாராட்டும் அளவுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வெளியான ஒரு பாடல் அவர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது குறித்த சுவாரசியமான தகவல்கள் இங்கே

25
அந்த மாலைப் பொழுது தந்த மயக்கம்.!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பழைய வீடியோவில், எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி மற்றும் பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்ற ஜாம்பவான்கள் பங்கேற்ற மேடையில் இளையராஜா தனது நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த மேடையில் எம்.எஸ்.வி ஒரு பாடலைப் பாடி முடித்ததும், "இது இளையராஜாவுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு" என்று கூற, நெகிழ்ந்து போன இளையராஜா, எம்.எஸ்.வியின் காலில் விழுந்து ஆசி பெற்று அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

35
பண்ணைப்புரத்து நினைவுகள்.!

அந்தப் பாடல் 1961-ல் வெளியான 'பாக்கியலட்சுமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மாலை பொழுதின் மயக்கத்திலே..." என்பதாகும். இது குறித்துப் பேசிய இளையராஜா, "எனக்கு அப்போது 15 முதல் 17 வயது இருக்கும். பண்ணைப்புரத்திலிருந்து கோம்பைக்கு நடந்து செல்லும் வழியில் வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும். அந்த வயதிலேயே இந்தப் பாடல் என்னை அத்தனை பாதித்தது" என்று நினைவுகூர்ந்தார்.

45
கண்ணதாசனின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும்

இந்தப்பாடலில் தன்னை மிகவும் கவர்ந்த விஷயமாக இளையராஜா குறிப்பிடுவது கவிஞர் கண்ணதாசனின் வரிகள் மற்றும் அதற்கு எம்.எஸ்.வி கொடுத்த உயிர். குறிப்பாக,  "இளமையெல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாது முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம்..." என்ற வரிகள் சமூகத்தில் உள்ள அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒரு தத்துவத்தைக் கொண்டிருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார். "மாலை பொழுதின் மயக்கத்தை அந்த இசைச் சுரங்களைக் கொண்டு அப்படியே கொண்டு வந்திருப்பார் அண்ணன் எம்.எஸ்.வி" என்று இசை நுணுக்கத்தைப் பாராட்டியுள்ளார்.

55
இதுதான் உண்மையான இசை, இதுதான் உண்மையான பாடல்

ஒரு சிறந்த படைப்பு என்பது காலங்களைக் கடந்து நிற்கும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி. தனக்கு தற்போதும், தான் 15 வயதில் கேட்ட அந்தப் பாடலை அதே சிலிர்ப்புடன் இளையராஜா விவரிப்பது, எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியின் மேதமைக்குச் சான்றாக அமைகிறது. "இதுதான் உண்மையான இசை, இதுதான் உண்மையான பாடல்" என்று இளையராஜா கூறிய வார்த்தைகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories