எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஜனனியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற முடிவில் கலெக்டரின் உதவியை நாடி இருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் ஃபுட் டிரக்கில் வேலை பார்த்து வந்த அமுதா என்கிற பெண், ஜனனி போதைப்பொருள் கடத்துவதாக வீடியோ வாக்குமூலம் அளித்துவிட்டு இறந்துபோய் இருக்கிறார். ஜனனி ஃபுட் டிரக் இருக்கும் இடத்தில் அமைந்துள்ள வீட்டின் மாடியில் இருந்து அமுதாவின் உடல் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் சாகும் முன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனனியை போலீசார் கைது செய்து அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி, அவரை 30 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வாங்கி உள்ளனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும் வழியில் ஜனனி போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
மதிவதினியை சந்திக்கும் நந்தினி
ஜனனி போலீஸிடம் இருந்து தப்பித்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நபர் போனில் ஜனனி கைது செய்யப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார் ஜனனி. இதையடுத்து கலெக்டர் மதிவதினியை பார்க்க நந்தினி, சக்தி, ரேணுகா ஆகியோர் சென்றிருக்கிறார்கள். அப்போது அவரிடம் அந்த வீடியோவையும் போட்டுக் காட்டி இருக்கிறார். அதை பார்த்ததில் இருந்து பேசாமல் இருக்கும் மதிவதினியிடம் சத்தியமா ஜனனிக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறுகிறார் நந்தினி. அந்த பொம்பள திட்டம் போட்டு தான் வேலைக்கு சேந்திருக்கு என கூறுகிறார்.
34
மதிவதினி சொன்ன ஷாக் தகவல்
நீங்க எதுக்கும் பதட்டப்படாதீங்க நந்தினி. நான் உங்ககிட்ட தெளிவா ஒரு விஷயம் சொல்றேன். எனக்கு ஜனனி மேல ஒரு சதவீதம் கூட சந்தேகம் இல்லை. இது ஒரு கட்டுக்கதை. ரொம்ப தெளிவா யோசிச்சு ஜனனியை சிக்க வச்சிருக்காங்க. இந்த நிலைமையில ஜனனி போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆனது நல்ல விஷயம் இல்லை. அவங்க எதை யோசிச்சு தப்பிச்சாங்க, எதை நோக்கி போறாங்கனு சுத்தமா புரியல. அவங்க தப்பிச்சு போனது அவங்களுக்கு எந்த ஆபத்தையும் உண்டாக்க கூடாது என கூறுகிறார் மதிவதினி. அவரிடம் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஆதி குணசேகரன் தான் காரணம் என கூறுகிறார் ரேணுகா.
அந்த சமயத்தில் போலீஸார் கலெக்டர் வீட்டுக்கு வருகிறார்கள். இவங்க ஜனனியோட சொந்தக்காரங்க தான இவங்க இங்கு வந்ததால் உங்க வீட்டுக்கும் சர்ச் வாரண்ட் வாங்கிட்டு வந்திருப்பதாக கூறி, போலீசார் கலெக்டர் மதிவதினி வீட்டிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இதனால் உஷார் ஆகும் மதிவதினி, இனி இந்த கேஸை சும்மா விடக்கூடாது என முடிவு செய்கிறார். அவர்கள் அனைவரையும் விடாமல் பாலோ பண்ணுமாறு சக்தியிடம் கூறுகிறார். இதையடுத்து என்ன ஆகப்போகிறது? கலெக்டர் உதவியுடன் இந்த கேஸில் இருந்து வெளியே வருவாரா ஜனனி? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.