நீத்துவால் ரவி -ஸ்ருதி டைவர்ஸ் பண்ணப்போறாங்களா? ஷாக் கொடுக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Jan 27, 2026, 09:54 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவால் ஸ்ருதி - ரவி இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் இவர்கள் டைவர்ஸ் செய்யப்போகிறார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி - மனோஜ் இடையேயான டைவர்ஸ் பஞ்சாயத்து ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் நீத்துவால் ஸ்ருதி - ரவி இடையே விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. நீத்து தான் ரவியை லவ் பண்ணுவதாக ஓப்பனாகவே சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான ஸ்ருதி, கோபித்துக் கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் முத்துவும் மீனாவும் நீத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். ஆனால் அவரோ நான் ரவியை லவ் பண்ணுவேன், அவர் என்னை திருப்பி லவ் பண்ண வேண்டாம் என முட்டாள்தனமாக பேசி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சண்டை போடும் ஸ்ருதி அம்மா

தன் மகள் வீட்டுக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டு ரூமுக்குள்ளேயே இருப்பதை பார்த்து பதறிப்போன நீத்துவின் அம்மா, நேராக ரவியின் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணுகிறார். என் பொண்ணை என்ன செஞ்சீங்க என கேட்க, விஜயாவும், அண்ணாமலையும் என்ன ஆச்சு என தெரியாமல் முழிக்கிறார்கள். பின்னர் தான் முத்துவும் மீனாவும் என்ன பிரச்சனை என்பதை கூறுகிறார்கள். நீத்துவின் செயலால் தான் ஸ்ருதி கோபித்துக் கொண்டு அங்கு சென்றுவிட்டதாகவும், சொல்கிறார்கள். இதைக்கேட்ட நீத்துவின் அம்மா, எனக்கு அவளால் பிரச்சனை வரும் என்று முன்னாடியே தெரியும் என சொல்வதோடு, ரவியையும் திட்டுகிறார்.

35
ஸ்ருதி - ரவி டைவர்ஸா?

ஸ்ருதியை சமாதானப்படுத்த ரவியும் மீனாவும் அவரது வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது விஜயாவிடம் பேசும் மனோஜ், அம்மா ரவிக்கும் ஸ்ருதிக்கும் பிரச்சனை பெருசாச்சுனா அவங்களும் டைவர்ஸ் பண்ணிருவாங்கள்ல, பேசாம நம்மளுடைய வக்கீலையே அவங்களுக்கு சேர்த்து பார்க்க சொல்லிடலாமா என கேட்கிறார். இதைக்கேட்டு அங்கிருந்த அண்ணாமலை, முத்து ஆகியோர் கடுப்பாகிறார்கள். உனக்கு அறிவே இல்லையா என அண்ணாமலை திட்டுகிறார். பல நேரத்தில் நீ உங்க அம்மா மாதிரியே பேசுற என கூறுகிறார் அண்ணமாலை, உடனே அருகில் இருந்த முத்து, இவன் புத்தியே இதுதானப்பா, அவன் வாழ்க்கை சரியில்லேனா எல்லோர் வாழ்க்கையும் அப்படி ஆகணும்னு நினைப்பான் என திட்டுகிறார்.

45
ஆறுதல் சொல்லும் மீனா

இதையடுத்து ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு ரவியும் மீனாவும் செல்கிறார்கள். அங்கு அம்மா மற்றும் ரவி அழைத்தும் கதவை திறக்க மறுக்கும் ஸ்ருதி, மீனாவின் குரலைக் கேட்டதும் கதவை திறந்து, அவரை மட்டும் உள்ளே அழைத்து பேசுகிறார். அப்போது ரவி மேல எந்த தப்பும் இல்லனு மீனா சொல்ல, அதற்கு ஸ்ருதி, அவன் மேல எந்த தப்பும் இல்லனு சொல்ல முடியாது மீனா, இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியே அவன் தான் என கூறுகிறார். அந்த நீத்துவுக்கு அவன் கொடுத்த இடத்தால் தான் அவ இந்த அளவுக்கு செய்கிறாள். ரவி கரெக்டா தான் இருக்கான், ஆனா இன்னொருத்தி ரவியை லவ் பண்றேன்னு சொல்றதை என்னால் ஏத்துக்க முடியல என கூறுகிறார் ஸ்ருதி.

55
ஸ்ருதி போட்ட கண்டிஷன்

நீத்துவிடம் பேசும்போது, ரவியை நான் விரும்புறேன். ஆனால் ரவி என்னை விரும்பனும்னு நான் எதிர்பாக்கலனு சொல்றா என மீனா சொல்ல, இதைக்கேட்டு நீங்க சும்மாவா இருந்தீங்க. அங்கையே அவளை அறைஞ்சிருக்க வேண்டியது தான என கேட்கிறார் ஸ்ருதி. இதையடுத்து சில கண்டிஷன் போடுகிறார் ஸ்ருதி. ரவி அங்க வேலை பார்ப்பதால் தான் இந்த பிரச்சனையே வந்தது. இனி ரவி அங்கு வேலை செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி, அந்த நீத்து என்கிட்ட வந்து ரவியை நான் இனி லவ் பண்ணமாட்டேன். இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணனும். இதுவரைக்கும் அவ பண்ணுனதுக்கெல்லாம் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும். சோசியல் மீடியால நான் ரவியை லவ் பண்ண மாட்டேன்னு வீடியோ போடணும் என கூறுகிறார். இதற்கெல்லாம் நீத்து சம்மதிப்பாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories