இந்த மீட்டிங் முடிஞ்சதும் ரூமை விட்டு வெளியே வரும் நிலா, சோழன் மட்டும் கடைசி நேரத்தில் வந்து உதவி செய்யலேனா இதெல்லாம் நடந்திருக்காது என நினைச்சு பார்த்து, சோழனுக்கு போன் போடுகிறார். எங்க இருக்கீங்க என கேட்க, சோழன், வெளிய தான் இருக்கேன் என சொல்கிறார். அடுத்த வார்த்தை பேசுவதற்குள், ஆபிஸ் கீழே ஓடோடி வந்த நிலா, எப்படி உங்களுக்கு இந்த லேப்டாப் கிடைச்சது என கேட்க, தான் அந்த ஆட்டோ ஸ்டாண்டில் சென்று நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி அந்த ஆட்டோக்காரரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கி வந்ததாக கூறுகிறார்.
கடைசி நேரத்தில் லேப்டாப்பை கொண்டு வந்து தன்னை கடவுள் போல் காப்பாற்றிய சோழனை கட்டிப்பிடிக்கும் நிலா, உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஒன்னு கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனால் உற்சாகத்தில் திளைக்கும் சோழன், அப்படியே கார் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார். அங்கு தன் அண்ணன், தம்பிகளை வரவைத்து, நிலா என்னைக் கட்டிப்பிடிச்சிட்டா என சொல்லி சந்தோஷப்படுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.