'மன்னன்' படத்திற்காக இளையராஜா இசையமைத்த 'அம்மா என்று அழைக்காத' பாட்டு ரஜினிக்கு திருப்தி தரவில்லையாம். ஆனால், இளையராஜாவின் வார்த்தைகளின் படி அந்த பாட்டு சூப்பர் ஹிட் ஆனது எப்படி தெரியுமா?
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி என்றாலே அது வெற்றிக்கு கியாரண்டி. ஆனால், இவர்களது கூட்டணியில் உருவான ஒரு காலத்தால் அழியாத பாடல், ரஜினியின் தயக்கத்தால் கைவிடப்படும் சூழலுக்குச் சென்றது என்பது பலரும் அறியாத உண்மை. பலமுறை கேட்டும் ரஜினிக்கு திருப்தி வராத நிலையில், இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தைக்காக ரஜினி சம்மதித்துள்ளார்.
25
ரஜினியின் தயக்கமும் படத்தின் இமேஜும்
1992-ம் ஆண்டு 'மன்னன்' பட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது, இளையராஜா அம்மா என்று அழைக்காத பாடலின் மெட்டைப் போட்டுக் காட்டினார். அப்போது ரஜினிகாந்த் ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினிக்கு ஒரு சின்ன நெருடல். "ராஜா, இந்தப் பாட்டு ரொம்ப மெதுவா இருக்கே, என்னோட இமேஜுக்கு இது செட் ஆகுமா? ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா? இதைத் தவிர்த்துவிட்டு வேறொரு பாட்டு வைக்கலாமா?" என்று தயக்கத்துடன் கேட்டார்.
35
இளையராஜா சொன்ன அந்த 'ஜோசியம்'.!
ரஜினியின் தயக்கத்தைப் பார்த்த இளையராஜா, அவரிடம் ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தையைச் சொன்னார். அது ஒரு ஜோசியம் போலவே அமைந்தது. “ரஜினி, இதுவரைக்கும் நீங்க ஒரு கமர்ஷியல் ஹீரோவா தியேட்டருக்கு ரசிகர்களை வர வச்சிருக்கீங்க. ஆனா, இந்தப் பாட்டு ரிலீஸ் ஆன அப்புறம், நீங்க ஒவ்வொரு வீட்டோட வரவேற்பு அறைக்கும் போவீங்க. உங்களைப் பிடிக்காத குடும்பங்களே இருக்காது. இது உங்களை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகும்.” இளையராஜாவின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்று, ரஜினியும் அந்தப் பாடலில் நடிக்கச் சம்மதித்தார்.
மன்னன் படம் வெளியான பிறகு, இளையராஜா சொன்னது அப்படியே பலித்தது. வாலியின் வரிகளும், ஜேசுதாஸின் கணீர் குரலும், ரஜினியின் உணர்ச்சிகரமான நடிப்பும் இணைந்து அந்தப் பாடலை ஒரு காவியமாக மாற்றியது. அதுவரை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்த குடும்பத் தலைவிகள் மற்றும் பெரியவர்கள், ரஜினியைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாடத் தொடங்கினர். ரஜினியின் "ஃபேமிலி ஆடியன்ஸ்" பலம் பலமடங்கு பெருகியது.
55
மாபெரும் கலைஞனின் தீர்க்கதரிசனம்.!
அன்று இளையராஜா சொன்ன அந்த வார்த்தைகள் வெறும் ஆறுதல் அல்ல, அது ஒரு மாபெரும் கலைஞனின் தீர்க்கதரிசனம். ஒருவேளை அன்று ரஜினி பிடிவாதமாக அந்தப் பாடலைத் தவிர்த்திருந்தால், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த 'தாய்' பாடல் ஒன்றை நாம் இழந்திருப்போம். இன்றும் அன்னையர் தினம் என்றாலே இந்தப் பாடல் தான் முதலிடத்தில் ஒலிக்கிறது!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.