Vikram meets Viji for Nila truth in Chellame Chellame: செல்லமே செல்லமே சீரியலில் விக்ரம் நிலாவை தேடி வரும் பொழுது விஜியின் வீட்டுக்கே வருகிறார் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.
செல்லமே செல்லமே சீரியலில் நேற்றைய எபிசோடில் நிலாவும் விக்ரமும் ஒரு ஹோட்டலில் அமர்ந்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது எதிர்பாராமல் வரும் விஜி அங்கே நின்று கொண்டிருக்கிறாள் ஆனால் அவர்களுக்கு நிலாவும் விக்ரமும் இருப்பது தெரியாது. ஒரு நேரத்தில் நிலாவின் குரல் கேட்க ஆச்சரியமாக திரும்பிப் பார்க்கும் விஜி இது நம்ம நிலா குரல் மாதிரியே இருக்கே என்று பார்க்கிறார் ஆனால் அங்கு வேறு ஒரு குழந்தை இருப்பதை பார்த்துவிட்டு இது நிலா இல்லை என்று அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார் அதன் பிறகு நிலாவும் விக்ரமும் வீட்டுக்கு செல்கின்றனர்.
24
Nila daughter truth revealed
போதும் போதும் அளவுக்கு எத்தனை வருஷமா அவ பல கஷ்டங்களை அனுபவிச்சிட்டா. நான் உன்கிட்ட வேண்டி கேட்கிறது ஒன்னே ஒன்னு தான் உன் பொண்ணு தொலைச்ச வாழ்க்கையை மீட்டு கொடு. பொண்ணு வாழ்க்கை இனிமேல் உன் கையில தான் இருக்கு. ஆசைப்பட்டு கட்டிக்கிட்டவன் கூட இப்ப என்ன நிலைமையில் இருக்கான்னு கூட எனக்கு தெரியல. அது எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் அவங்க ரெண்டு பத்தியும் ஒண்ணா வாழ வைக்கணும்னு நான் நினைக்கிறேன். இந்த இடத்துல அவ வாழ்க்கையை தொலைச்சாலும் அந்த இடத்துல அவனும் பொலிவுடன் வாழ வைக்கிறது ஒரு கைல தான் இருக்கு. இந்த பொண்ணுக்கு நீ தான் துணையா இருக்கணும் என்றெல்லாம் அழுதுபடியே விஜிக்காக பாக்கியலட்சுமி வேண்டிக்கொள்கிறார்.
34
Chellame Chellame Serial Today Episode
பாக்கியலட்சுமி கடவுளிடம் தன் மகளுக்காக வேண்டுதல்: பாக்கியலட்சுமி தன் மகளான விஜிக்கு சாமியிடம் வேண்டி கேட்கிறாள். கடவுளே என் பொண்ணோட வாழ்க்கையில என்ன எல்லாம் நடக்குதுன்னு நீ கண்கூட பார்த்துகிட்டு தானே இருக்க. வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு ஒவ்வொரு நாளும் போராடிக்கிட்டு இருக்கா. இருண்டு கிடைக்கிற வாழ்க்கைல நீ எப்ப தான் ஒளி கொடுக்க போற. ஒவ்வொரு நாளும் அவை கஷ்டத்தை எல்லாம் பாக்குற நீ ஏன் அவளுக்கு கருணை காட்ட மாட்டேங்குற. இன்னும் எத்தனை நாளைக்கு அவளுக்கு கஷ்டமும் சோதனையும். தப்பா சரியோ அவ வாழ்க்கையே அமைச்சுக்கிட்டா. ஏதோ ஒரு மூலையில அவ புருஷன் குடும்பத்தோட சந்தோஷமா இருப்பான்னு நான் நிம்மதியா இருந்தேன். மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி வாழ்க்கை தலைகீழா மாறிப்போச்சு.
44
Vikram and Viji in Chellame Chellame Serial
நிலவைத் தேடிப் போகும் விக்ரம்: நிலாவை தேடி விக்ரம் தேடி போகும்பொழுது விஜியை இருக்கும் இடத்தை பார்க்கிறார் இவை எங்க இங்கே இருக்கா என்று பார்த்துக் கொண்டிருக்க விஜியும் மேலிருந்து விக்ரமை பார்த்து விடுகிறார் பார்த்ததும் வீட்டுக்குள் ஓடுகிறார். விக்ரமும் வீட்டிற்குள் போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.