ஆக்‌ஷன் மோடில் கார்த்திகை தீபம்! புதையல், மோதல் என பறக்கும் காட்சிகள் - லாஜிக் எங்கே எனப் புலம்பும் ரசிகர்கள்!

Published : Feb 28, 2026, 04:05 PM IST

Karthigai Deepam Serial Fans Criticism Tamil : கார்த்திகை தீபம் சீரியலானது எப்போ பார்த்தாலும் ஆக்‌ஷன் மோடிலேயே ஒளிபரப்பாகி வருகிறது. சாமுண்டீஸ்வரி ஏதாவது பஞ்சாயத்தில் சிக்குவதும், கார்த்திக் அவரை மீட்பதுமாக ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெறுகின்றன. 

PREV
19
கார்த்திகை தீபம் சீரியல் புதையல்

கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமண காட்சிகளுக்கு பிறகு கார்த்திகை தீபம் சீரியலானது ஆக்‌ஷன் மோடிலேயே ஒளிபரப்பாகி வருகிறது. சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தில் சிக்குவதும் சரி அவரை கார்த்திக் காப்பாற்றுவதும் சரி, சந்திரகலாவின் பிளான், ரோகிணி, மயில்வாகனம், சுவாதி என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் பாதுகாப்பதே தனது வேலையாக வைத்திருக்கிறார் கார்த்திக்.

29
Karthigai Deepam Serial Fans Criticism Tamil

இதற்கிடையில் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் ரேவதிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையாக ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். கடைசியில் அவரால் எந்த பலனும் இல்லை என்று தெரிந்து அவர் தொடர்பான காட்சிகளை கட் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த வெளிநாட்டு மாப்பிள்ளை தொடர்பான காட்சிகள் சீரியலில் இடம் பெறவில்லை. இவ்வளவு ஏன், சாமுண்டீஸ்வரிக்கு ரோகிணி, ரேவதி, துர்கா மற்றும் சுவாதி என்று 4 மகள்கள். இதில், 3 மகள்களின் காட்சிகள் மட்டுமே தினந்தோறும் ஒளிபரப்பாகிறது.

39
Zee Tamil Karthigai Deepam Action Scenes

துர்காவின் காட்சிகள் இல்லை. அவரது கணவர் நவீன் மற்றும் கார்த்திக்கின் பாட்டி பரமேஸ்வரியின் காட்சிகளும் சீரியலில் இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, உடன் பிறந்த தனது அக்காவை பழி தீர்க்க எப்போதும் அவருடன் இருந்து கொண்டு அவருக்கு கீ கொடுத்துக் கொண்டே இருக்கும் சந்திரகலா போடும் திட்டமே பக்காவாக இருக்கும் போது, எதற்காக இயக்குநர் காளியம்மாவை கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. பாதியில் அழைத்து வந்தார். கடைசியில் அவரை பாதியிலேயெ பேக்கப் செய்து அனுப்பி வைத்துவிட்டார்.

49
சாமுண்டீஸ்வரி, சந்திரகலா

சிவனாண்டி மற்றும் மயில்வாகனம் இருவரும் இணைந்து ஆக்‌ஷன் மோடில் சொதப்பினாலும் அவர்களுக்கு பிளான் போட்டு கொடுப்பதில் சந்திரகலா கில்லாடியாக இருக்கிறார். கார்த்திகை தீபம் சீரியலின் 1133ஆவது எபிசோடு வரையில் ரோகிணியின் வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்றுவது போன்றும், ஜோதிடரின் பொய் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றார் இயக்குநர். அதில், ஜோதிடர் உண்மையை சொல்லவே, ரோகிணியின் குழந்தையும் காப்பாற்றப்பட்டது. அதோடு அந்த காட்சிகள் முடிந்தன. அதில் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை துப்பாக்கியால் சுடுவது போன்று ரேவதி கனவு கண்டுள்ளார்.

59
கார்த்திக், ரேவதி

இது தேவையில்லாத சீனாக இருந்தாலும், டுவிஸ்ட் கொடுக்கவே இப்படியொரு காட்சியை இயக்குநர் சீரியலில் வைத்திருக்கிறார். இதே போன்று இந்த காட்சிகள் முடிந்து மீண்டும் மயில்வாகனம் ஹோட்டல் பிஸினஸ் செய்யும் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எங்கோ கோயில் வளாகத்தில் புதிய சன்னதி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் புதையில் கண்டெடுக்கப்பட்டது.

69
கார்த்திகை தீபம் சீரியல் இயக்குநர்

அதனை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சாமுண்டீஸ்வரி அவர்களிடம் கேட்க, அதிகாரிகள் எல்லோரும் ஒரு வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார்கள். அதனால், அடுத்த நாள் வந்து புதையலை மீட்டு செல்கிறோம் என்று கூறிவிட்டனர். இதனால், சாமுண்டீஸ்வரி அந்த புதையை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார். ஊர் மக்கள் அனைவரும் புதையலை எல்லோருக்குமே பிரிந்து கொடுத்து விடலாம் என்று ஐடியா கொடுத்தாலும் அதெல்லாம் தவறு என்று கூறி தனது வீட்டிற்கு எடுத்து சென்று தனது அறையில் வைத்து பூட்டு போட்டுள்ளார்.

79
லாஜிக் இல்லா மேஜிக் - கார்த்திகை தீபம்

ஆனால், கார்த்திக் இப்படி செய்ய கூடாது. முறையாக போலிசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள் என்னென்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்று லிஸ்ட் போட்டு அதனை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள் என்று அட்வைஸ் செய்தார். அதையெல்லாம் கேட்காத சாமுண்டீஸ்வரி தனது அறையில் வைத்து பூட்டு போட்டு லாக் செய்துள்ளார். ஆனால், சந்திரகலாவோ இது தான் சரியான சந்தர்ப்பம் என்று தனது கணவருக்கு போன் போட்டு புதையை திருட பிளான் போட்டுள்ளார்.

89
கார்த்திகை தீபம் சீரியல் டுவிஸ்ட்

இதன் மூலமாக தனது அக்காவை மட்டுமின்றி கார்த்திக்கையும் வீட்டை விட்டு வெளியில் துரத்திவிடலாம் என்று பிளான் போட்டுள்ளார். ஆனால், சந்திரகலா ஏதாவது பிளான் போடுவார் என்று முன் கூட்டியே தெரிந்து ரேவதியிடம் நாம் புதையலுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு முன், இப்படியொரு காட்சி தேவையா? ஏன் கோயில் இடத்தில் தோண்ட வேண்டும், புதையலை எடுத்து தனது வீட்டில் வைக்க வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறது. ஆனால், அதில் உள்ள ஆக்‌ஷன் காட்சிகள் தான் சுவாரஸ்யம் என்பதற்காக இயக்குநர் இப்படியெல்லாம் காட்சி வைத்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

99
கார்த்திகை தீபம் சீரியல்

இனி அந்த புதையலை சந்திரகலா அண்ட் கோ திருடிச் செல்வது போன்றும், கார்த்திக் அதனை கண்டுபிடிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பார்த்து தெரிந்து கொள்வோம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories