எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் குழந்தையால் ஆதி குணசேகரனுக்கு ஆபத்து வரும் என ஜோசியர் கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக உள்ள நிலையில், அவர் மீது ஓவர் அக்கறை எடுத்துக் கொள்கிறேன் என்கிற பெயரில் அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் சக்தி. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுள்ளனர். இந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயலும் கதிர், சக்தியை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார். ஆனால் சக்தி அவர்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் ஜனனியிடம் சென்று சமாதானம் ஆகிவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
25
பகீர் தகவலை சொன்ன ஜோசியர்
கதிரும், ஞானமும் ஒரு ஜோதிடரை அழைத்து ஜோசியம் பார்க்கிறார்கள். அப்போது, அந்த ஜோசியர், ஜனனி வயிற்றில் வளரும் குழந்தை வந்தால் இந்த வீட்டின் மூத்த சகோதரருக்கு ஆகாது என கூறி இருக்கிறார். ஜனனியின் குழந்தையால் ஆதி குணசேகரனுக்கு ஆபத்து வரும் என்கிற விஷயம் அறிந்து கதிரும், ஞானமும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் அந்த ஜோசியர் சென்ற பிறகு ரேணுகா மற்றும் நந்தினியை அழைத்து பேசும் ஞானம், இது அண்ணனுக்கும் தெரியவேண்டாம், அம்மாவுக்கும் தெரிய வேண்டாம் என சொல்கிறார்கள். ஆனால் ஜோசியர் சொன்னதை கரிகாலன் ஒட்டுக் கேட்டுவிடுகிறார்.
35
விசாலாட்சி எங்கே போனார்?
பின்னர் ரூமுக்கு சென்று ஜோசியர் சொன்னதைப் பற்றி அனைவரும் ஆலோசிக்கிறார்கள். அப்போது தர்ஷினி, நந்தினியிடம் அப்பத்தா எங்க போனாங்க என விசாரிக்கிறார். அதற்கு அவர், கோவிலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டு சென்றார். அப்படியே அவங்க தம்பி வீட்டுக்கு எஸ்கேப் ஆகிருப்பாங்க. என் மருமகளை நான் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறேன்னு சொல்லிட்டு எங்க போனாங்கனு தெரியல என கூறுகிறார். அவங்க கோவிலுக்கு போனதும் நல்லது தான் என சொல்லும் தர்ஷினி, இங்க ஜோசியர் சொன்னதை மட்டும் கேட்டிருந்தால் எவ்வளவு பெரிய டிராமா பண்ணிருப்பாங்க என சொல்கிறார்.
யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளுங்கள் என இவங்க சொன்னதில் தனக்கு நம்பிக்கை இல்லை என கூறும் தர்ஷினி, குறிப்பாக ஞானம் சித்தப்பா கண்டிப்பா உலறிவிடுவார் என கூறுகிறார். அப்போது அருகில் இருந்த சக்தி, அவங்க சொன்னா சொல்லிட்டு போறாங்க, எனக்கு யாரை நினைத்தும் எந்த கவலையும் கிடையாது. ரொம்ப பண்ணுனாங்கனா நானும் ஜனனியும் இந்த வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிடுறோம் என சொல்கிறார். அப்போது சக்தியை திட்டும் நந்தினி, அவ இப்போ கர்ப்பமா இருக்குற நிலைமையில, வெளிய போய் அவள உன்னால எப்படி பாத்துக்க முடியும் என கேட்கிறார்.
55
ஈஸ்வரி பற்றி வந்த குட் நியூஸ்
அந்த நேரத்தில் தர்ஷினிக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. மருத்துவமனையில் இருந்து டாக்டர் போன் பண்ணி இருக்கிறார். அப்போது அவர் உற்சாகம் பொங்க பேசியதை அடுத்து அனைவரும் என்ன ஆச்சு என விசாரிக்கிறார்கள். அதற்கு அவர், அம்மா இன்னும் ரெண்டு நாள்ல கண்விழிச்சிடுவாங்களாம் என சொல்கிறார். இதைக்கேட்ட நந்தினி, சக்தியிடம் உன் புள்ள வர்ற நேரம் எல்லாம் பாசிடிவ்வா நடக்குது பாரு என கூறுகிறார். இதனால் இன்னும் சில நாட்களில் ஈஸ்வரியின் எண்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து என்ன நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.