அதென்ன Y பிரிவு பாதுகாப்பு? விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

Published : Feb 14, 2025, 09:21 AM ISTUpdated : Feb 14, 2025, 10:16 AM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
17
அதென்ன Y பிரிவு பாதுகாப்பு? விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்? அதன் சிறப்பம்சங்கள் என்ன?
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சி தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன, இந்தியாவில் எத்தனை விதமான பாதுகாப்பு பிரிவு உள்ளன... அவை யார் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

27
SPG பாதுகாப்பு

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மிக முக்கிய நபர்கள் என பலருக்கும் பலவிதமான பிரிவுகளில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில் திரைப்பட பிரபலங்களும், பிரபல தொழிலதிபர்களும் அடங்குவர். ஆனால் அது அவரவரின் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மையை பொறுத்தே மாறுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பை அளிப்பது, 180 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படை. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பாதுகாப்பு படை என்றால் அது SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்‌ஷன் குரூப் தான்.

37

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் தான் இந்த SPG எனப்படும் ஸ்பெஷல் புரொடக்‌ஷன் குரூப் உருவாக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பை SPG ஏற்றுக்கொள்ளும். துணை ராணுவப் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பு தான், தற்போதைய பிரதமர் மோடிக்கும் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் மொத்தம் 3 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... தவெக தலைவர் விஜய்க்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த அதிரடி முடிவு!

47
Z+ பாதுகாப்பு

SPGக்கு அடுத்தபடியாக வருவது Z+ பாதுகாப்பு பிரிவு. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, இந்தோ திபேத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் இருந்து வீரர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டது தான் இந்த இசட் பிளஸ் பிரிவு. முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர்கள், கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான தலைவர்கள் ஆகியோருக்கு இந்த பிரிவு பாதுகாப்பை வழங்கி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு தான் வழங்கப்படுகிறது. 5க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுடன், 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு வழங்கும் இந்த குழுவிற்கு மாதம் தோறும் செலவிடப்படும் தொகை சுமார் 33 லட்சம் ரூபாய் ஆகும். 

57
Z பிரிவு பாதுகாப்பு

தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் மற்றும் காவல்துறையினரை சேர்த்து 22 பேர் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு பெயர் இசட் பிரிவு. இது உயிருக்கு ஆபத்து இருக்கும் விஐபி-களுக்கு உளவுத்துறை பரிந்துரை உடன் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகும். 1 முதல் 3 ஆயுதம் ஏந்திய வீரர்கள் அந்த விஐபி எங்கு சென்றாலும் உடன் பயணிப்பார்கள். தமிழ்நாட்டில் இசட் பிரிவு பாதுகாப்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரிவினருக்கு மாதம் தோறும் 16 லட்சம் செலவளிக்கப்படுகிறது.

67
Y+ பாதுகாப்பு

இதற்கு அடுத்த இடத்தில் ஒய் பிளஸ் பாதுகாப்பு பிரிவு வருகிறது. குறிப்பிட்ட விஐபிக்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் பாதுகாப்பு அளிப்பார்கள். அதனுடன் 6 பேர் கொண்ட காவல்படை அவர்களது வீட்டிற்கு சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பார்கள். சல்மான் கான், கங்கனா ரனாவத், ஷாருக்கான் போன்றோருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதுகாப்பு படைக்காக மாதம் தோறும் 15 லட்சம் செலவளிக்கப்படுகிறது.

77
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ஏன்?

இதற்கு அடுத்து தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வருகிறது. அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு தான் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில், தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் உள்பட 8 காவலர்கள் இடம்பெறுவார்கள். இந்த பிரிவுக்கு மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்க்கு இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படும். விஜய் மீது முட்டை அடிக்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் சிலர் பேசியதால் அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக எக்ஸ் பிரிவு உள்ளது. அது தேசிய பாதுகாப்பு படையினர் யாரும் இல்லாமல் உள்ளூர் காவல்துறையினரை மட்டுமே வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்க்கு 'பண கொழுப்பு' ! தேர்தல் கூட்டணிக்கு எண்டு கார்டு போட்ட சீமான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories