சமந்தாவின் போன் வால்பேப்பரில் இருப்பது யாருடைய பிக்? காலை எழுந்தவுடன் அதை பார்க்கிறாரா?

Published : Feb 14, 2025, 09:09 AM IST

Samantha Mobile Wallpaper Linga Bhairavi Amman : சமந்தாவின் போன் வால்பேப்பரில் யாருடைய புகைப்படம் இருக்கும் என்று தெரியுமா? காலையில் எழுந்தவுடன் அந்த புகைப்படத்தைத்தான் பார்க்கிறாராம். அது யாருடைய புகைப்படம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
சமந்தாவின் போன் வால்பேப்பரில் இருப்பது யாருடைய பிக்? காலை எழுந்தவுடன் அதை பார்க்கிறாரா?
சமந்தாவின் சினிமா பயணம்

Samantha Mobile Wallpaper Linga Bhairavi Amman : புகழின் உச்சத்தில் இருக்கும் சமந்தா இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அதிகளவில் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யா, விஜய், விக்ரம் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு, சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தார். தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். விவாகரத்துக்குப் பிறகு கவர்ச்சியைக் கூட்டிய சமந்தா, தனது சினிமா பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறார்.

 

25
சமந்தாவின் வால்பேப்பர் புகைப்படம்

நாள்தோறும் சமந்தா தொடர்பான செய்திகள் தான் சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. திருமண விவாகரத்துக்கு பிறகு மீண்டும் காதலில் விழுந்ததாக தகவல் வெளியானது. பிரபல இயக்குநர் ஒருவரை அவர் காதலிப்பதாக சொல்லப்பட்டது. இப்போது சமந்தாவைப் பற்றிய ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகிறது. சமந்தா தனது போன் வால்பேப்பரில் யாருடைய புகைப்படத்தை வைத்திருக்கிறார்?

இதுகுறித்து பல செய்திகள் வந்தாலும், பலர் நாக சைதன்யாவின் புகைப்படம்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், அவரது போனில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தியில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் அவரது போனில் லிங்க பைரவி அம்மன் புகைப்படம் வால்பேப்பராக இருக்கிறதாம்.

35
சமந்தாவின் ஆன்மீக பயணம்

இந்த அம்மன் யார்? உண்மையில் சமந்தா தனது போனில் இந்த புகைப்படத்தை வைத்திருக்கிறாரா? திருமணத்திற்கு முன்பு சமந்தா கிறிஸ்தவர். நாக சைதன்யாவுடனான திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, அவர் தொடர்ந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தார். திருப்பதி மலை ஏறி ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசித்த சமந்தா, இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்து வந்தார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு, கடவுளை வழிபட்டு வருகிறார். விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து ஆன்மீக வழியில் மீண்டார். குறிப்பாக, புனிதத் தலங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குச் சென்று வருகிறார்.

45
லிங்க பைரவி கோவிலில் சமந்தா

யோகா, தியானம் செய்து மன அழுத்தத்தில் இருந்து மீண்டார். லிங்க பைரவியை அதிகமாக வழிபடத் தொடங்கினார். அம்மனை வழிபட்டு மன அமைதி அடைந்தார். அதனால்தான் தனது போனில் அந்த வால்பேப்பரை வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. லிங்க பைரவியை சமந்தா வழிபடுவது தெரிந்ததே. ஆனால், போன் வால்பேப்பரில் அம்மன் புகைப்படம் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தாயான பின்னரும் குறையாத அழகு; தீபிகா படுகோனை பார்த்து ரன்வீர் சிங் கொடுத்த ரியாக்ஷன்!
 

55
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

உண்மையில் வைத்திருக்கிறாரா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை. ஆனால், சமந்தாவின் ஆன்மீகப் பயணம் தொடர்கிறது. தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த பிரபல வலைத் தொடர் 'சிட்டாடல்' வெளியானது. மேலும் சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.

காதலர் தினத்தன்று காதலன் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்!
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories