Ajith Statement: நடிகர் அஜித்தின் திடீர் அறிக்கை..! பின்னணி இதுவா..? வெளியான தகவல்!

First Published | Nov 17, 2022, 3:39 PM IST

நடிகர் அஜித் இன்று காலை திடீர் என அறிக்கை வெளியிட்ட நிலையில், இந்த அறிக்கைக்கான பின்னணி  என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களின் ஒருவரான அஜித், இன்று காலை தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். இந்த அறிக்கையில் "உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என கூறப்பட்டிருந்தது".

தன்னுடைய தனி பட்ட கருத்து குறித்து அதிகம் வெளியில் பேசாத நடிகர் அஜித் இந்த அறிக்கையை வெளியிட பின்னணி காரணம் என்ன என்பது குறித்து... ஒரு விவாதமே சமூக வலைத்தளத்தில் போய் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

Ajith: பொறாமைக்கோ... வெறுப்புக்கோ... நேரமில்லை! நடிகர் அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை..!

Tap to resize

அதாவது அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் "பொறாமைகோ வெறுப்புக்கோ நேரமில்லை. சிறப்பான பணியை மட்டும் கை  விடாதீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை அவர் கூறியதற்காக நோக்கம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித் - விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் பொறாமை - வெறுப்பு போன்ற குணங்களை துறந்து இரு படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவே பார்க்கப்படுகிறது.
 

அஜித் - விஜய் படங்கள் தனி தனி நாட்களில் வந்தாலே.. இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் முட்டி மோதி கொள்வார்கள். ஒரே நாளில் அஜித் - விஜய் படம் வந்தால் சொல்லவா வேண்டும்? எனவே முன்னெச்சரிக்கையாக முந்து கொண்டு இப்படி ஒரு அறிக்கையை அஜித் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?

Latest Videos

click me!