சமீபத்தில் நடிகை ஹன்சிகா தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நபரின் புகைப்படம் வெளியிட்டு, கல்யாணம் குறித்த தகவலை உறுதி செய்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகை தமன்னாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில், தீயாக ஒரு தகவல் பரவி வந்தது.
மேலும் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், எனவே சில நாட்கள் படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தமன்னா முழு ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் மற்ற படங்களில் நடிக்க கமிட் ஆகவில்லை என கூறப்பட்டது. நீண்ட நாட்களாக தமன்னா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட அவரது பெற்றோர், திருமணத்திற்கு மகள் ஒப்புக்கொண்டு விட்டதால், மிகவும் பரபரப்பாக திருமண வேலைகளில் இறங்கி உள்ளதாகவும் விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
Ajith: பொறமைக்கோ... வெறுப்புக்கோ... நேரமில்லை! நடிகர் அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை..!
எனினும் இந்த தகவல் குறித்து தமன்னா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது மிகவும் கட்டமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தமன்னா ஷாக்கிங் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை தமன்னாவின் கை வசம் தற்போது ஒரு தமிழ் படங்கள் கூட இல்லை என்றாலும், இரண்டு தெலுங்கு திரைப்படம், ஒரு ஹிந்தி மற்றும் ஒரு மலையாள படம் ஆகியவை உள்ளது. மேலும் தமன்னா பாந்த்ரா என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார் . இந்த படத்தில் நடிகர் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.