பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு என்ன நடந்து என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
24
மயங்கி விழுந்த ரோபோ சங்கர்
விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமானவர் ரோபோ சங்கர். பின் சின்னத்திரையிலும் சினிமாவிலும் தனது வித்தியாசமான நடனம் மற்றும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடந்தது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் இலங்கையில் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டே அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பு தளத்தில் வைத்து ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். படக்குழுவினர் உடனடியாக ரோபோ சங்கரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
34
ஐசியூ வார்டுக்கு மாற்றம்
முதல்கட்ட பரிசோதனையில் ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடும் குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்க்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை வரை பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், மாலையில் அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் அதில் இருந்து குணமடைந்து வந்தார். அப்போது மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக்கொண்டார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் வைத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று மாலையில் அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் மறுநாளே உயிரிழந்திருக்கிறார். ஐசியூவில் இருந்தபோது ரோபோ சங்கருக்கு என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. நம்பிக்கையோடு இருந்த அவரது குடும்பத்தினர் இந்த திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ரோபோ சங்கரின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.