நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கருக்கு இன்று காலை உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கர் மறைவால் அவரது ஒட்டுமொத்த குடும்பமே பேரதிர்ச்சியில் உள்ளது.
ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இவர் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன அம்பி திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படமே அவருக்கு கடைசி படமாக அமைந்தது. ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
24
ரோபோ சங்கர் குடும்பம்
ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்கிற மனைவியும், இந்திரஜா என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பமே கலைக்குடும்பம் தான். அனைவருமே சினிமாவில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். அதில் பாண்டியம்மாவாக அவர் நடித்த கேரக்டர் பெரியளவில் பேசப்பட்டது. பிகில் பாண்டியம்மா என்கிற அடையாளத்தையும் இந்திரஜாவுக்கு பெற்றுத் தந்தது.
34
ரோபோ சங்கர் மகள்
பிகில் படத்தை தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்திரஜா. அப்படமும் பெரியளவில் வெற்றியை பெற்றது. சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜா, திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். கடந்த ஆண்டு தன்னுடைய மகள் இந்திரஜாவுக்கு மதுரையில் ஜாம் ஜாம்னு திருமணம் செய்தார் ரோபோ சங்கர். அதுமட்டுமின்றி திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி, அதில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்டது.
ரோபோ சங்கருக்கு மகள் என்றால் அலாதி பிரியம். சிறுவயதில் இருந்தே அவர் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாராம். இதை இந்திரஜாவே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். திருமணமான ஓராண்டில் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இந்திரஜா, ரோபோ சங்கரை தாத்தா ஆக்கினார். அவர் தன்னுடைய பேரனை கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார் இந்திரஜா. இப்படி அப்பாவின் செல்லப்பிள்ளையாக இந்திரஜா, தற்போது தந்தையின் மறைவால் கதறி அழுகிறார். அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.