ரஜினி - கமலுக்கு இல்லாத மனசு... விஜய் - அஜித் செய்யாத விஷயத்தை செய்து வரும் கார்த்தி!

Published : Sep 18, 2025, 08:57 PM IST

Karthi Encourage Debut Young Heroes and Directors : தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், போன்ற பிரபலங்கள் செய்யாதா ஒரு செயலை செய்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் கார்த்தி.

PREV
19
பருத்திவீரனாக ஜெயித்த கார்த்தி:

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, தமிழில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கார்த்தி. முதல் படமே, நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 'பருத்திவீரன்' படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை அதிக ரசிகர்களால் ரசிக்கப்படும் படமாக உள்ளது.

கார்த்தியின் மார்ஷல் படத்தின் வியக்க வைக்கும் விண்டேஜ் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்!

29
வித்தியாசமான கதாபாத்திரங்கள்:

'பருத்திவீரன்' பட வெற்றிக்கு பிறகு, கார்த்தி தேர்வு செய்து நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'நான் மஹான் அல்ல', 'சிறுத்தை', 'சகுனி', 'மெட்ராஸ்', 'கொம்பன்', 'கைதி', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்கள் அனைத்துமே தனித்துவமான கதையம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் இவர் ஏற்று நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் கார்த்தியின் நடிப்பு திறமைக்கு ஒரு மணிமகுடம் என கூறலாம்.

சமந்தாவை தாக்கி பேசிய மஞ்சு லட்சுமி? விவாகரத்துக்கு பிறகு சினிமா வாய்ப்பு இல்லையா?

39
கார்த்தியின் அசுர வளர்ச்சி:

நடிகர் கார்த்தியின் சகோதரர் சூர்யா, தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும்... அவர் அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில், தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபிக்க அதிகம் போராடினார். ஆனால் கார்த்திக்கு அந்த வெற்றி அவரின் முதல் படத்திலேயே கிடைத்தது. அதே போல்... அடுத்தடுத்த படங்களின் வெற்றி இவரை மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாற்றியது.

49
உழவர்களுக்கு கை கொடுத்த கார்த்தி:

ராகவா லாரன்ஸ், பாலா, போன்ற நடித்தார்கள் பல ஏழை மக்களுக்கும், கார்த்தியின் சகோதரர் சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் ஏழை குழந்தைகள் படிப்புக்கும் உதவி செய்து வந்தாலும், நடிகர் கார்த்தி உழைக்கும் வர்க்கமாக பார்க்கப்படும், உழவர்களுக்கு கை கொடுக்க முடிவெடுத்தார். அதன்படி உழவன் என்கிற அறக்கட்டளையை துவங்கி, விவசாயிகளுக்கு ஏராளமாக உதவிகளை செய்து வருவது மட்டும் இன்றி, வருடம் தோறும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார்.

59
இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் கார்த்தி:

இதைத்தொடர்ந்து, தன்னுடைய அடுத்த புது முயற்சியாக கார்த்தி... அடுத்த தலைமுறை நடிகர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். குறிப்பாக தன்னுடைய படப்பிடிப்பு மற்றும் சொந்த வேலைகள் இருந்தாலும், அதனை புறக்கணித்துவிட்டு இளையதலைமுறைக்கு முன்னோடு போல் செயல்படுகிறார்.

திடீர் மாரடைப்பால் சுருண்ட பிரபல நடிகர்; பதறிய தளபதி விஜய் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

69
ருத்ராவின் ஓ எந்தன் பேபி

உதாரணமாக, விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமான போது, அவருடைய 'ஓ எந்தன் பேபி' படவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதே போல் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படவிழாவில் கலந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்தினார். 

79
காந்தி கண்டாடி

மேலும் பாலா நடித்து ரிலீஸ் ஆன 'காந்தி கண்டாடி' பட விழா, விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த 'பீனிக்ஸ்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகமான 'சுள்ளான் சேது' படத்தின் பூஜை, கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜை போன்றவற்றில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.

89
இளைய தலைமுறையினரை வரவேற்கும் கார்த்தி

பொதுவாக சில பெரிய நடிகர்கள், மற்றும் நடிகைகள் அவர்களின் பட விழாவில் கூட கலந்து கொள்ள கூட பெரிய தொகையை தயாரிப்பாளரிடம் கேட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கார்த்தி போன்ற ஒரு முன்னணி நடிகர் இளைய தலைமுறையினரை வரவேற்கும் பொருட்டு இப்படி செய்து வருகிறார். இவரின் செயல் அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

99
இயக்குநர்களை வாழ்த்தும் கார்த்தி

இன்று டாப் ஹீரோக்கள் லிஸ்டில் உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பிரபலங்கள்... திறமையான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படத்தை பார்த்துவிட்டு, அவர்களை அழைத்து பாராட்டி வந்தாலும், இது போல் படவிழாக்களில் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories