Marshal Movie Vintage Look Shooting Spot Pictures : 'டாணாக்காரன்' பட இயக்குநருடன் கார்த்தி முதல் முறையாக இணைய உள்ள 'மார்ஷல்' திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Marshal Movie Vintage Look Shooting Spot Pictures : பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனும், நடிகருமான சூர்யா 5 வருடங்களுக்கு பின், கடுமையாக போராடி அடைந்த வெற்றியையும் வளர்ச்சியையும்... தன்னுடைய முதல் படமான , 'பருத்திவீரன்' படத்திலேயே எட்டிப்பிடித்தவர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி. அதே போல் தொடர்ந்து ஒரே மாதிரியான கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பாமல், ஒவ்வொரு படத்திற்கும் நேர்த்தியான வித்தியாசத்தை காட்டி வருகிறார்.
தற்போது இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, இதை தொடர்ந்து.... இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகும் மார்ஷல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்ட ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது.
’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் ஆகியோரின் மார்ஷல் படமும் மற்றொரு லட்சிய முயற்சியாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகே 1960 காலகட்டத்தை நினைவு படுத்தும் பிரத்தேயகமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஆச்சரிப்படுத்தியுள்ளார். இந்த ஒற்றை புகைப்படமே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.
44
மார்ஷல் பட நாயகி கல்யாணி:
மார்ஷல் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, லோகா படத்தின் மூலம் 250 கோடி வசூல் நாயகியாக மாறியுள்ள கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய , பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.