செய்யமாட்டேன் என்று சொன்னான் - மனோஜிற்கு என்ன நடந்தது? பெரியப்பா ஜெயராஜ் கூறிய தகவல்!
நாங்கள் சொன்னதால் தான் மனோஜ், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டான் என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
நாங்கள் சொன்னதால் தான் மனோஜ், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டான் என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
48 வயதில் மாரடைப்பு:
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா இழப்பு தமிழ் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு இயக்குனராக சாதிக்க வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு இருந்தும், அது நினைவேறுவதற்கு முன்பாகவே... 48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மனோஜுக்கு வந்த நெஞ்சுவலி:
இந்த நிலையில் தான் அவருக்கு என்ன நடந்தது? என்பது குறித்து அவரின் பெரியப்பாவும் பாரதிராஜாவின் சகோதரருமான ஜெயராஜ் விளக்கமாக கூறியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம். "மனோஜ் இறந்ததாக சொல்லப்படும் நாளன்று, அவனது அப்பா உடன் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறான். மேலும், தேனிக்கு சென்று ரெஸ்ட் எடுக்க திட்டமிட்டிருந்தான். அன்று மாலை மனைவி கொடுத்த பப்பாளி பழத்தை சாப்பிட்ட பின்னர், ஒருமணி நேரம் சென்று வீட்டில் வேலை செய்தவர்கள் டீ போட்டுக் கொடுத்ததும் அதை குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது.
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!
அவனை வற்புறுத்தினோம்:
நெஞ்சை பிடித்துக் கொண்டு துடித்திருக்கிறான். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே அவன் ஆபரேஷன் எல்லாம் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னான். நாங்கள் தான் அவனை வற்புறுத்தினோம் என்று அழுதபடி பேசியுள்ளார்.
மார்ச் 7-ஆம் தேதி நடந்த ஆபரேஷன்:
மேலும், குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நீ ஆபரேஷன் செய்து உன் பிரச்சனைகளை சரி செய்துகொள்ள வேண்டும் என கூறினோம். மார்ச் 7-ஆம் தேதி ஆபரேஷன் நடந்த நிலையில், அவன் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகு தான் டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வந்தோம். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படி நடந்திருக்கிறது.
மனோஜ் பாரதிராஜா பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்; அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில்!
ஜெயராஜ் பகிர்ந்த தகவல்:
பொதுவாக மனோஜ் எல்லோரிடமும் நன்றாக பழகுவான். ஏதாவது பிரச்சனை என்று எங்களிடம் சொன்னால் நாங்கள் கஷ்டப்படுவோம் என்பதால் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டான் என்று தோன்றுகிறது. பாரதிராஜாவும் தன்னுடைய மகன் போட்டோவை பார்த்து அழுது கொண்டே இருக்கிறார். மனோஜ் இறந்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஜெயராஜ் கூறியுள்ளார். இவர் தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.