ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரரா? ஆர்சிபிக்காக விளையாடிய அந்த பிரபலம் யார்?
நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் யார்; அவர் விளையாடிய போட்டிகள் பற்றி பார்க்கலாம்.
நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் யார்; அவர் விளையாடிய போட்டிகள் பற்றி பார்க்கலாம்.
This Star Cricketer is Son in Law of Actress Radhika Sarathkumar : 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் ராதிகா. இவர் முதன்முதலில் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். அவருடனான விவாகரத்துக்கு பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹார்டி என்பவரை கரம்பிடித்தார் ராதிகா, இந்த ஜோடிக்கு ரயானே என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரிச்சர்டு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்த ராதிகா பின்னர் நடிகர் சரத்குமாரை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் உள்ளார்.
ராதிகாவின் மருமகன் யார்?
நடிகை ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர். அவர் பெயர் அபிமன்யு மிதுன். அவரை தான் ராதிகாவின் மகள் ரயானே திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ராதிகாவின் மருமகனான அபிமன்யு மிதுன் இந்திய கிரிக்கெட் அணிக்கும் விளையாடி இருக்கிறார். இதுதவிர ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யு மிதுன் விளையாடி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Radhika's Surgery: ராதிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு? மகளிர் தினத்தில் பகிர்ந்த வலிமையான பதிவு!
வேகப்பந்துவீச்சாளராக அசத்திய அபிமன்யு மிதுன்
இந்திய அணியில் கடந்த 2010-ம் ஆண்டு விளையாடினார் அபிமன்யு மிதுன். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது 2009ம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பை தொடர் தான். அதில் கர்நாடகா அணிக்காக விளையாடிய மிதுன், முதல் போட்டியிலேயே 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய மிதுன் மொத்தம் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் உடனடியாக அவருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு வந்தது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அபிமன்யு மிதுன்
இந்திய அணிக்காக 5 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அபிமன்யு மிதுன், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை விளையாடினார். அப்போது 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசி எதிரணியினரை திணறடித்த மிதுனை எக்ஸ்பிரஸ் பவுலர் என்று தான் அழைப்பார்கள். பின்னர் 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மிதுனுக்கு மேற்கொண்டு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் 2021-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள்... "இப்படி ஒரு விஜயை நான் பார்த்ததே இல்லை" த.வெ.க தலைவரை சரமாரியாக புகழ்ந்த ராதிகா!