தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை வாஷ் அவுட் பண்ணிய வீர தீர சூரன்!
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை விட பன்மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை விட பன்மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.
Veera Dheera Sooran Beat Empuraan in Tamilnadu Box Office : மலையாளத்தில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன எம்புரான் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலில் மளமளவென முன்னேறி வருகிறது. வெளியான ஐந்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 27ந் தேதி வெளியானது. அதே நாளில், விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் அன்று மாலையில் வெளியானாலும், பாக்ஸ் ஆபிஸில் வீர தீர சூரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன்
தற்போது தமிழகத்தில் வேறு எந்தப் படமும் வெளியாகாததால், எம்புரான் மற்றும் வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களுமே போட்டி போட்டு வசூல் செய்து வருகின்றன. இந்நிலையில், இரண்டு படங்களும் ஆறாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழகத்தில் மட்டும் வீர தீர சூரன் 6ம் நாளில் 2.4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியளவில் மொத்தமாக இப்படம் 2.52 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அதே நேரத்தில், எம்புரான் திரைப்படம் ஆறாம் நாளில் 5 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழகத்தில் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்... 3 மாசம் ஓவர்! 2025-ல் கோலிவுட் கொடுத்த ஹிட் படங்கள் எத்தனை தெரியுமா?
எம்புரான் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
இதன் மூலம், எம்புரான் திரைப்படம் ஆறு நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து 7.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாள் 2.25 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், மற்ற நாட்களில் 9 லட்சம், 1.3 கோடி, 1.5 கோடி, 75 லட்சம், 5 லட்சம் என வசூல் செய்துள்ளது. தற்போது வீர தீர சூரன் திரைப்படம், தமிழ்நாட்டில் 2025ல் அதிக வசூல் செய்த நான்காவது படமாக உள்ளது. முதல் நாள் லேட்டாக ரிலீஸ் ஆனாலும், வீர தீர சூரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் தயாரிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இது விக்ரமின் நல்ல கம்பேக் படம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
வீர தீர சூரனுக்கு அடித்த ஜாக்பாட்
வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. உலகளவில் ரூ.50 கோடியைக் கடந்துவிட்ட இப்படம் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த வாரம் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆவதால், இந்த வார இறுதியில் தமிழ்நாட்டில் புதுப்படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் வீர தீர சூரனின் வசூல் வேட்டை இந்த வாரமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ