சூடுபிடித்த ஜன நாயகன் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ்; ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடும் தளபதி!

Published : Apr 03, 2025, 11:25 AM ISTUpdated : Apr 03, 2025, 11:27 AM IST

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் நிறைவடையாத நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போது சூடுபிடித்துள்ளது.

PREV
14
சூடுபிடித்த ஜன நாயகன் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ்; ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடும் தளபதி!

Vijay's "Jana Nayagan" Movie: Crores in Business Before Release! தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் விஜய் தான். இதுவரை 68 படங்களில் நடித்துள்ள விஜய், தன்னுடைய 69-வது படத்துடன் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளார். விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். முன்னதாக அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய வினோத், ஜன நாயகன் படம் மூலம் விஜய்யுடன் முதன் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

24

படு ஜோராக நடக்கும் ஜன நாயகன் ஷூட்டிங்

ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் சன் டிவியிடம் சரண்டர் ஆன விஜய்; ஜன நாயகன் இப்போ கலாநிதி மாறன் கையில்!

34

ஜன நாயகன் ஓடிடி உரிமையை தட்டிதூக்கியது யார்?

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஜன நாயகன் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான ஓடிடி உரிமம் மட்டும் ரூ.121 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்தி ஓடிடி உரிமம் மட்டும் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை. அது செய்யப்பட்டால் நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்ட படமாக ஜன நாயகன் மாறும். இதற்கு முன்னர் லியோ பட ஓடிடி உரிமை ரூ.129 கோடிக்கு விற்கப்பட்டதே சாதனையாக உள்ளது. ஜன நாயகன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

44

ப்ரீ ரிலீஸ் பிசினஸில் கல்லாகட்டும் ஜன நாயகன்

இதுதவிர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமமும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. ஜன நாயகன் பட சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி உள்ளது. சுமார் 55 கோடி கொடுத்து அந்த உரிமத்தை அந்நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே ஜன நாயகன் திரைப்படம் ரூ.176 கோடி வசூலித்து உள்ளது. இதுதவிர படத்தின் ஆடியோ உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இப்படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே லாபம் பார்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் இதுவா? அரசியலுக்கு திரைப்படம் மூலம் பக்கா ஸ்கெச் போட்ட தளபதி!

Read more Photos on
click me!

Recommended Stories