தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் என தனக்கென தனி அடையாளத்தோடு ரசிகர்களால் அறியப்பட்டவர் குண்டு கல்யாணம்.
1967 ஆம் ஆண்டில் சினிமா அடியெடுத்து வைத்த குண்டு கல்யாணம், 1979 இல் 'மழலை பட்டாளம்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார். இவரது நடிப்பு மற்றும் உடல் தோற்றம் இவரை ரசிகர்கள் மனதில் நிலைக்க செய்தது.
பின்னர் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை, துணை நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார்.
திரைத்துறையை தாண்டி, இவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர். தேர்தல் சமயங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பயணம் மேற்கொண்டு தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில் தற்போது குண்டு கல்யாணம் தீவிர சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை உள்ளது.
ஆனால் தன்னுடைய சிகிச்சைக்கு கூட போதிய பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார். தன்னுடன் நடித்த நடிகர்கள் மற்றும் அரசியல் ரீதியாக தெரிந்தவர்கள் என அனைவரிடமும் பணம் கேட்டும் நயா பைசா கூட கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.
ஆபரேஷன் செய்ய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் குண்டு கல்யாணத்தில் பரிதாப நிலை குறித்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்களையே கலங்க வைத்துள்ளது.