சென்சார் போர்டையே அலறவிட்ட பேய்ப் படம்: அதீத திகிலால் 'ஏ' சர்டிபிகேட் வாங்கிய பிரசாந்த் நீலின் '418' ரிலீஸ் எப்போது?

Published : Oct 05, 2026, 07:26 PM IST

இயக்குநர் பிரசாந்த் நீலின் முன்னாள் உதவி இயக்குநர் கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் சைத்ரா ஆச்சார் நடித்துள்ள ‘418’ ஹாரர் திரைப்படத்தின் திகிலூட்டும் ட்ரெய்லர் வெளியானது. ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் அக்.23 அன்று திரைக்கு வருகிறது.

PREV
15
நடுங்க வைக்கும் ‘418’ ட்ரெய்லர் ரிலீஸ்!

மொழிகள் மாறலாம்; ஆனால் பயத்திற்கு எல்லைகள் இல்லை- தற்கால சினிமாவில் வழக்கமாக வரும் 'பேய்-நகைச்சுவை' (Horror Comedy) பாணிகளுக்கு நடுவே, பார்த்தவுடன் எலும்புகளை உரைய வைக்கும் தீவிர உளவியல் கலந்த பக்கா சீரியஸ் ஹாரர் த்ரில்லராக (Psychological Horror Thriller) உருவாகியுள்ளது ‘418’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது.

25
கதைக்களம் என்ன? -15 ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்ட அறை!

மருத்துவக் கல்லூரி ஒன்றில் சுமார் 15 ஆண்டுகளாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும் ‘ரூம் நம்பர் 418’-ஐச் சுற்றியே படத்தின் கதைக்களம் நகர்கிறது. அந்த அறை 15 வருஷமா மூடித்தான் இருந்துச்சு... ஆனா இப்போ அதைத் தொறந்துட்டாங்க என்ற மர்மம் நிறைந்த குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த வினாடிகளிலேயே பார்ப்பவர்களை மிரட்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது.

இருள் சூழ்ந்த பழைய தாழ்வாரங்கள், பதற்றத்தைத் தொற்றவைக்கும் பின்னணி இசை மற்றும் நடுக்கத்தை வரவழைக்கும் காட்சிகளென ஒவ்வொரு ஃபிரேமிலும் திகில் கூச்சலிடுகிறது. முன்னணி நாயகி சைத்ரா ஆச்சார் (Chaithra Achar), அந்த மர்மமான சூழலில் சிக்கி வெளிப்படுத்தும் மிரட்டலான நடிப்பு ட்ரெய்லரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

35
சென்சார் போர்டை அதிரவைத்த காட்சி அமைப்புகள்!

இப்படம் முதலில் ஜூலை 31-ம் தேதியே ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழ் பெறுவதில் பெரும் சிக்கல் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான, நெஞ்சை அதிரவைக்கும் ஹாரர் காட்சிகள் மற்றும் அதிதீவிர திகில் அம்சங்களுக்கு சென்சார் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகக் கடுமையான இழுபறிக்குப் பின் படத்திற்கு ‘ஏ’ (A - Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டு, ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இருப்பினும், இந்த சென்சார் சர்ச்சை ஹாரர் சினிமா ரசிகர்களிடையே படத்திற்கான ஹைப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

45
கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும் படைப்பு!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்ற கீர்த்தன் நடகௌடா, இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தடம் பதிக்கிறார்.

இப்படத்தை பிரபல முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. மேலும், தன் முன்னாள் உதவி இயக்குநரின் இந்த மிரட்டலான படைப்பை இயக்குநர் பிரசாந்த் நீல் பெருமையுடன் வழங்குகிறார்.

55
எப்போது ரிலீஸ்?

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் பான்-இந்தியா வெளியீடாக உருவாகியுள்ள ‘418’ திரைப்படம், அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.பயத்தின் உண்மை முகத்தை தியேட்டரில் பார்க்கத் துடிக்கும் ஹாரர் ரசிகர்களுக்கு, இந்த தீபாவளி சீசனில் 'ரூம் நம்பர் 418' மறக்க முடியாத திகில் விருந்தாக அமையப்போவது உறுதி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories