OTT Releases : மண்டாடி முதல் அனிமல்ஸ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அரைடஜன் படங்களின் லிஸ்ட் இதோ

Published : Oct 05, 2026, 05:08 PM IST

This Week OTT Releases : அக்டோபர் 5 முதல் 11 வரை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் 8 புதிய படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் வெளியாகவுள்ளன.

PREV
14
This Week OTT Releases

அக்டோபர் 5 முதல் 11 வரையிலான இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைக்களங்களுடன் பல புதிய படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் மொத்தம் 8 புதிய படைப்புகள் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளன. இதில் தமிழில் சூரி மற்றும் சுஹாஸ் நடித்த மண்டாடி, இந்தியில் பரிணீதி சோப்ரா நடித்துள்ள ரிப்போர்ட்டிங் லைவ், பென் அஃப்லெக்கின் அனிமல்ஸ் உள்ளிட்ட படங்களும் அடங்கும்.

OTT Movie: ரூ.3 கோடி பட்ஜெட்.. ரூ.60 கோடிக்கு மேல் வசூல்! ஓடிடியில் வெளியாகும் மலையாள கிரைம் த்ரில்லர்

24
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

மண்டாடி

சூரி மற்றும் சுஹாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மண்டாடி, தமிழ்நாட்டின் பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா. இதில் சூரி முத்துக்காளி என்ற முன்னாள் படகு ரேஸராகவும், சுஹாஸ் அவரது பழைய போட்டியாளரான சட்டப்புலி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் முத்துக்காளிக்கும், அவரது பழைய எதிரியான சட்டப்புலிக்கும் இடையே மீண்டும் போட்டி உருவாகிறது. பாரம்பரிய படகுப் பந்தயம், பழைய பகை மற்றும் தனிப்பட்ட உணர்வுகள் ஆகியவை இணைந்து கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. ‘மண்டாடி’ திரைப்படம் அக்டோபர் 9, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது.

அனிமல்ஸ்

பென் அஃப்லெக் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படம் அனிமல்ஸ். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்குப் போட்டியிடும் மார்க் கிம்பால் என்ற கதாபாத்திரத்தில் பென் அஃப்லெக் நடித்துள்ளார். மனைவி அபிகெய்லுடன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மார்க்கின் குடும்பத்தில், அவர்களது இளைய மகன் பணத்திற்காக கடத்தப்படுவதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

மகனை மீட்பதற்காக மார்க் எடுக்கும் ஆபத்தான முயற்சிகளும், அந்தச் சம்பவத்தால் குடும்பத்திற்குள் உருவாகும் நெருக்கடிகளும் படத்தின் கதையை நகர்த்துகின்றன. ‘அனிமல்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 9, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ரிப்போர்ட்டிங் லைவ்

பரிணீதி சோப்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் த்ரில்லர் ரிப்போர்ட்டிங் லைவ். இதில் அவர் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற தீவிர லட்சியம் கொண்ட இளம் பத்திரிகையாளராக நடித்துள்ளார். தேவன் போஜானி அனுபவம் வாய்ந்த கேமராமேன் கதாபாத்திரத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

அதிகாரமும் பணபலமும் கொண்ட ஒரு குழு நடத்தி வரும் சட்டவிரோத மணல் கொள்ளையைப் பற்றி இருவரும் விசாரணை நடத்துகின்றனர். உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிக்கும் அவர்களுக்கு எதிராக பல ஆபத்துகள் உருவாகின்றன. ‘ரிப்போர்ட்டிங் லைவ்’ திரைப்படம் அக்டோபர் 9, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது.

34
ஓடிடி வெளியீடுகள் என்னென்ன?

கேரி

பிரபலமான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள கேரி திரைப்படத்தில் சம்மர் எச். ஹோவெல், கேரி ஒயிட் என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூகத்துடன் அதிகம் தொடர்பு இல்லாமல், தனது தாய் மார்கரெட் ஒயிட்டின் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வளர்கிறார் கேரி.

வெளியுலகத்திலிருந்து மகளைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் தாயின் கட்டுப்பாடுகள் கேரியின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கின்றன என்பதையும், அவர் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளையும் படம் மையமாகக் கொண்டுள்ளது. ‘கேரி’ திரைப்படம் அக்டோபர் 7, அன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இன்சைடு தி சர்க்கிள்

மெக்சிகோவைச் சேர்ந்த த்ரில்லர் வெப்சீரிஸான இன்சைடு தி சர்க்கிள், நெருங்கிய நண்பர்கள் நால்வரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் வகையில் ஒரு தனிப்பட்ட வீடியோ வெளியாவதுடன், பிரபல நடிகை ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.

அதன் பின்னர் பிளாக்மெயில், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் சதித்திட்டங்கள் என அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவருகின்றன. ஒரு கட்டத்தில் நண்பர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ‘இன்சைடு தி சர்க்கிள்’ வெப்சீரிஸ் அக்டோபர் 7, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பிலோ

ஜோஷ் ஹார்ட்நெட் நடிப்பில் உருவாகியுள்ள கனடியன் ஹாரர் டிராமா பிலோ. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடரில் அவர் கால்வின் பென்னி என்ற உள்ளூர் மீனவராக நடித்துள்ளார். தந்தையின் மர்மமான மரணம் கால்வினின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அந்த மரணத்தின் பின்னணி குறித்த உண்மையைத் தேடும் பயணத்தில், தனது குடும்பத்தையும் சமூகத்தையும் தான் நம்பி வாழும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்படுகிறார். ‘பிலோ’ தொடர் அக்டோபர் 8, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

44
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

100 டேஸ் ஆஃப் டிசெப்ஷன்

1932-ஆம் ஆண்டு ஜப்பானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த கியோங்சியோங்கை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள தென் கொரிய வரலாற்று ஸ்பை-ரொமான்ஸ் தொடர் 100 டேஸ் ஆஃப் டிசெப்ஷன். இதில் லீ க்யா-கியுங் என்ற பிக்பாக்கெட் திருடி, தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு உளவு பணியில் ஈடுபடுகிறார்.

மொழிபெயர்ப்பாளர் வேடத்தில் ஜப்பானிய அரசு அலுவலகத்துக்குள் நுழையும் அவர், அங்கு 100 நாட்கள் நீடிக்கும் ரகசிய பணியை மேற்கொள்கிறார். இந்தச் சூழலில் உயர்நிலை மொழிபெயர்ப்பாளரான கிம் டே-வூங்குடன் ஏற்படும் சந்திப்பு கதைக்கு புதிய திருப்பங்களை ஏற்படுத்துகிறது. ‘100 டேஸ் ஆஃப் டிசெப்ஷன்’ தொடர் அக்டோபர் 10, அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

பதி பத்னி அவுர் பங்கா – சீசன் 2

பிரபல ஜோடிகள் பங்கேற்கும் செலிபிரிட்டி ரியாலிட்டி கேம் ஷோவான பதி பத்னி அவுர் பங்கா இரண்டாவது சீசனுடன் மீண்டும் வருகிறது. இதில் கலந்து கொள்ளும் ஜோடிகள் தங்களது கெமிஸ்ட்ரி, புரிதல் மற்றும் உறவின் வலிமையை சோதிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் சவால்களில் பங்கேற்க உள்ளனர்.

வழக்கமான போட்டிகளைத் தாண்டி, தங்களது திருமண வாழ்க்கை குறித்த பல விஷயங்களையும் ஜோடிகள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். போட்டியாளர்களுக்கு இடையிலான நகைச்சுவையான உரையாடல்கள், சவால்கள் மற்றும் போட்டி இந்த சீசனின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். ‘பதி பத்னி அவுர் பங்கா’ சீசன் 2 அக்டோபர் 10, அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

OTT : மகளை பழிவாங்கும் தந்தையின் கதை... வெற்றிமாறன் இயக்கிய இந்த வெப் சீரிஸ் பற்றி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories