தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்த நிகழ்வில் பின்னர் இருந்தே, விஜய் மற்றும் அவருடைய தந்தைக்கு பிரச்சனை துவங்கி விட்டது.
பின்னர் நடிகர் விஜய், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை. அதிலிருந்தவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்கிறார்கள். என்று எஸ்.ஏ.சி தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்தார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
இந்த பிரச்சனை நேற்று திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஜய் அவரது தாய் - தந்தை இருவரையும் காரில் காக்க வைக்கப்பட்டதாக, பிரபல வார இதழ் எஸ்.ஏ.சி கொடுத்த பேட்டியில் இப்படி தெரிவித்ததாக கூறி இருந்தது.
இதற்க்கு தற்போது பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியின் மூலம் உண்மையை தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, அந்த வார இதழில் நான் கொடுத்த பேட்டி வந்திருந்தது. அதே நேரத்தில் உண்மைக்கு மாறாக நான் சொல்லாத விஷயம் ஒன்றும் வந்துள்ளது.
நானும், என்னுடைய மனையும், விஜய்யின் தாயாருமான ஷோபனா இருவரும் அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது, அவர் இருவரையும் காரில் காக்க வைத்த பின்னர், சோபனாவை மட்டும் வீட்டிற்குள் வர சொல்லியதாகவும் இதனால் இருவரும் திரும்பி வந்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. எனக்கும் விஜய்க்கும் மனக்கசப்பு உள்ளது உண்மை தான். ஆனால் அவர் அவருடைய தாயாரிடம் எப்போதும் போல் பேசி கொண்டு தான் இருக்கிறார். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என தன்னுடைய பேட்டி மூலம் தெளிவு படுத்தியுள்ளார்.