சபாஷ் சரியான போட்டி... ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகை..!!

First Published | Sep 28, 2021, 12:47 PM IST

சமீப காலமாக திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. அந்த வகையில், 'விருமன் (Viruman ) படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஹீரோயினாக மாறியுள்ளார். இவரை தொடர்ந்து, சிறந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான, ராஜீவ் மேனனின் (director Rajiv Menon ) மகள் சரஸ்வதி மேனன்  (Saraswati Menon) விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள ஒரு படத்தில் சரஸ்வதி நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழுவினரால் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தரமணி' படத்தின் நாயகன், நடிகர் வசந்த் ரவிக்கு ஜோடியாக சரஸ்வதி நடிப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சரஸ்வதி, அவ்வப்போது தன்னுடைய அறிமுகம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

Tap to resize

தற்போது சரஸ்வதி மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸில் உள் எழுத்தாளராகவும், இயக்குநராகவும், பணியாற்றுகிறார். சரஸ்வதி தனது தந்தை ராஜீவ் மேனனின் இயக்கத்தில் வெளியான 'சர்வம் தாளமயம்' படத்தில் ஒரு பாடலுக்காக நடனமாடியுள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் மாதேஸ்வரன் 2019 ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணி காகிதம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே யாரும் எதிர்பார்க்காத விதமாக, பிரமாண்ட இயக்குனர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக ராஜீவ் மேனனின் மகளும் களம் இறங்க உள்ளார்.

இந்த இரு வாரிசு நடிகைகளில் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து, முன்னணி நடிகை என்கிற இடத்தை யார் பிடிப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

Latest Videos

click me!