விதவிதமான வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது பல்வேறு தொலைக்காட்சிகள்.
அந்த வகையில் அடுத்த மாதம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு இணையான வரவேற்பை பெற்று வருகிறது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சர்வைவர்' நிகழ்ச்சி.
இதில் தொகுப்பாளராக பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் களமிறங்கி, அசால்ட் செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு மற்றும் பரபரப்பு குறையால் மிகவும் டஃப் ஆன டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
காடர்கள் அணி, வேடர்கள் அணி என்று, இரண்டு பிரிவினராக மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
இந்த போட்டியில், கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாடும் நபருக்கு பரிசாக சுமார் ஒரு கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாகி வருகிறார்கள். இது வரை சிருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரபலங்களின் ஃபிட்னஸ் ட்ரைனர், மற்றும் மாடலுமான ஐஸ்வர்யா கிருஷ்ணன், கலந்து கொண்டு, தன்னுடைய அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இவர் டாப் அணியாமல், மிகவும் போல்டாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள், மற்றும் பிகினி உடை புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.