பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள்.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.
முன்பில் இதே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானாலும், பின்னர் அதில் உண்மை இல்லை என கூறப்பட்டது. அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜிபி முத்து (GP Muthu), பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சம்யுக்தாவின் (Samyuktha) தோழி ப்ரதாயினி ஆகியோர் பிக்பாஸ் லிஸ்டில் இடம்பெற்றாலும் பின்னர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உறுதியாக கலந்து கூடிய 9 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த லிஸ்டில் நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத பிரபலங்கள் உள்ளது ஆச்சர்யம் என்றே கூறலாம்.
தற்போது வெளியே கசியந்துள்ள தகவலில் பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளர்களை சேர்த்து மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு, தனிமை படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர்.
அனைத்து போட்டியாளர்களின் பெயர்களும் தற்போது வெளியாகவில்லை என்றாலும் இதில் உறுதியாக கலந்து கொள்ளும் 9 பேர் யார் யார் என்பது வெளியே கசிந்துள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்க்கும் தொகுப்பாளினி பிரியங்கா,( VJ Priyanka ), யாரும் எதிர்பாராத நடிகையான பிரியாமணி (priya mani ), ஜெமினிகணேசன் அவர்களின் பேரன் அபிநய் (abinay ) ஆகியோர் அடங்கும்.
மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் சின்னத்தம்பி சீரியலில் நடித்த நடிகை பவானி ரெட்டி (Paavani Reddy), பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கியுள்ள நிழல்கள் ரவி (Nilalgal Ravi), பிரபல நடிகை ஷகிலாவின் மகளான மிளா (Mila ), நடிகை பிரியங்கா (Priyanka), நடிகை யாஷிகாவின் ஆண் நண்பரும் மாடலுமான நிரூப் நந்தகுமார், (Niroop nandakumar) மாடலிங் துறையில் கலக்கி வரும் (akshara reddy) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.