தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து பின்னர் அவர் அதனை மறுப்பதும் வாடிக்கை.
அந்த வகையில் பாகுபலி நடிகர் பிரபாஸை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. ரசிகர்களும் இவர்களது ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும் என, சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து இந்த செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இவரது திருமணத்திற்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையை நடத்தி வந்தனர் இவரது குடும்பத்தினர்.
திருமணத்திற்காக சில ஆண்டுகள் பூஜை புனஸ்காரம் என்று செய்து வந்த அனுஷ்கா, வழிய வந்த படவாய்ப்புகளையும் ஏற்காமல் இருந்தார்.
பின்னர் மீண்டும் சைலன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது கை வசம் எந்த படங்களும் இல்லை. அதே நேரத்தில் இவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது தீயாக பரவி வருகிறது.
அந்த வகையில் விரைவில் அனுஷ்கா பிரபல, இயக்குனரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் யார்? அவரது பெயர் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தகவலும் வழக்கம் போல் வதந்தியாக இல்லாமல் உண்மையாக வேண்டும் என அனுஷ்காவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.