சித்ரா இறந்த பின் 11 பெண்களுடன் உல்லாசம்... பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் - வெளியான பகீர் தகவல்

Published : May 23, 2022, 04:06 PM IST

VJ Chitra : ஹேம்நாத்தால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நடிகை சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

PREV
14
சித்ரா இறந்த பின் 11 பெண்களுடன் உல்லாசம்... பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் - வெளியான பகீர் தகவல்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அந்த சமயத்தில் அவரது கணவர் ஹேம்நாத்தும் உடன் இருந்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

24

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஹேம்நாத், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், ஹேம்நாத்தால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நடிகை சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

34

இதுகுறித்து அவர் கூறியதாவது : ஹேம்நாத் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் பழக்கம் ஹேம்நாத்துக்கு உள்ளது. அவருடன் நெருக்கமாக பழகிய தொகுப்பாளினி ஒருவர், அவரால் கர்ப்பமானதாகவும் ரேகா நாயர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

44

அந்த தொகுப்பாளினி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கெஞ்சியும் ஹேம்நாத் மறுப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி அவர் கருக்கலைப்பு செய்தாராம். இதெல்லாம் சித்ராவுக்கும் தெரியும். சித்ரா மறைவுக்கு பின்னரும் ஹேம்நாத் 11 பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...‘டிமாண்டி காலனி 2’வில் நான் இருக்கேன்... ஆனா இயக்கப்போவதில்லை - திடீர் டுவிஸ்ட் கொடுத்த அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories