
தமிழ் சினிமாவில் இவர்கள் காமெடி இருந்தால் படம் ஹிட் ஹிட்டு என்று சொல்லும் அளவிற்கு காமெடி ஜாம்பவான்களாக இருந்தவர்கள் தான் கவுண்டமனி மற்றும் செந்தில். இவர்களது வரிசையில் அடுத்ததாக இடம் பிடித்தவர்கள் தான் விவேக் மற்றும் வடிவேலு. ஒவ்வொரு காமெடியனுக்கும் தனி டிரேடு மார்க் உண்டு. அதன்படி கவுண்டமனி என்றாலே அடிப்பராகவும், செந்தில் என்றாலே அடி வாங்குவராகவும் காமெடியில் கலக்கினர்.
இதையடுத்து, வடிவேலு தனது வடிவேலு பாடி லாங்குவேஜ் மூலமாக காமெடியில் கலக்கினார். இதில் விவேக்கின் காமெடி தனி ரகம் தான். விவேக் மட்டுமே சமூக கருத்துகளை மையப்படுத்தி காமெடி காட்சியில் கலக்கியிருப்பார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க மட்டுமின்றி சிந்திக்கவும் செய்யவும். மனதில் உறுதி வேண்டும் என்ற படம் மூலமாக சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களிலும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு; கோப்பையுடன் - ரொக்க பரிசை வென்றது யார் தெரியுமா?
சினிமாவின் உச்சத்தில் இருக்கும் வடிவேலு தனக்கு பிடித்த நடிகர்கள் தான் தன்னுடன் காமெடி காட்சியில் நடிக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், விவேக் அதற்கு சற்று ஆப்போசிட். எல்லாமே இயக்குனர் சாய்ஸ் தான். காமெடியை மற்றும் தனக்கு ஏற்ற போல் மாற்றுவார். மற்றபடி எந்த ஒரு விஷயத்திலும் தலையிட மாட்டார்.
காமெடியனை தாண்டி பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விவேக் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மறைந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும், அவரது நினைவுகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் விவேக் மற்றும் வடிவேலு இருவரும் இடையில் இருக்கும் ஃப்ரண்ட்ஷிப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்று விசாரணைக்கு வந்த ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு; நீதிமன்றம் கூறியது என்ன?
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விவேக் சாரும், வடிவேலும் ரொம்ப குளோஸ். ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸா தான் இருந்தாங்க. இவ்வளவு ஏன், பத்ம ஸ்ரீ விருது கொடுத்த போது கூட ஷுட்டிங்கில் இருந்த வடிவேலு சார் போன் செய்து வாழத்தினாங்க. சாரோட மறைவுக்கு பிறகு வீட்டிற்கு வந்த வடிவேலு போட்டோவை பார்த்து அழுதார். அதன் பிறகு மகள்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். என்னுடைய மகள்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவரோட காமெடியை ஒன்னுவிடாம பார்ப்பார்கள். என்னோடைய இரண்டாவது மகள் அவரது காமெடியை மனப்பாடமா கூட அப்படியே சொல்லிடுவா.
நாங்கள் இருக்கும் ஏரியாவை பார்த்து, இங்க ஏதாவது இடம் இருக்குமான்னு கேட்டாறு, பின்னர் விசாரிச்சு எங்கள் தெருவில் தான் வடிவேலு புதிதாக வீடு கூட வாங்கியுள்ளார். அவர்கள் இருவருமே எப்போதும் நல்ல நண்பர்களாக தான் இருந்துருக்காங்க என பேசி உள்ளார்.