பிக் பாஸ் தமிழ் சீசன் 8: அதிகம் பேசப் படாத டாப் 3 பிக் பாஸ் பைனலிஸ்ட்!

First Published | Jan 18, 2025, 4:10 PM IST

Top 3 Bigg Boss Tamil Season 8 Finalist Contestants Not in Trending : பிக் பாஸ் தமிழ் சீசன்8 நிகழ்ச்சி நாளை நிறைவு பெற உள்ள சவுந்தர்யா மற்றும் முத்துக்குமரனை மட்டுமே ரசிகர்கள் பலரும் அதிகளவில் பேசி வரும் நிலையில் மற்ற போட்டியாளர்கள் பற்றி யாரும் அந்தளவிற்கு பேசுவதில்லை.

Bigg Boss Tamil Season 8 Top 5 Finalist, Bigg Boss Tamil Season 8 Finale

Top 3 Bigg Boss Tamil Season 8 Finalist Contestants Not in Trending : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது. இறுதிப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 ஃபைனலிஸ்டாக ரயான், முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், ரயான் டிக்கெட் டூ ஃபினாலே மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றார். மற்ற போட்டியாளர்கள் டாஸ்க் மூலமாக இறுதி வாய்ப்பை பெற்றனர்.

Top 3 Bigg Boss Tamil Season 8 Finalist Contestants

இப்போது தான் ஆரம்பித்த மாதிரி இருந்தது ஆனால், அதற்குள்ளாக பிக் பாஸ் முடிய போகிறது என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் யார் டைட்டில் வின்னராக வருவார்கள் என்று ஆவலும், எதிர்பார்ப்பும் இப்போதே ரசிகர்களிடையே ஏற்பட தொடங்கியுள்ளது. அதற்கான ரேஸில் இருப்பது சவுந்தர்யா மற்றும் முத்துக்குமரன் தான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள். இவர்களில் யாரேனும் ஒருவர் தான் டைட்டில் வின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Tap to resize

Top 3 Bigg Boss Tamil Season 8 Finalist Contestants that are not talked about much

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கான டாப் 5 ஃபைனலிஸ்டில் விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோரைப் பற்றி இணையவாசிகள் பெரியளவிற்கு பேசவில்லை. என்னதான் ஃபைனலிஸ்டாக இருந்தாலும் கூட அவர்களைப் பற்றிய பேச்சு அந்தளவிற்கு இல்லை. மேலும், வோட்டிங்கிலும் சவுந்தர்யாவை விட முத்துக்குமரன் தான் முன்னிலையில் இருக்கிறார். இதன் காரணமாக அவர் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.

Top 3 Bigg Boss Tamil Season 8 Finalist Contestants Not in Trending

டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சவுந்த்ரயா 2ஆவது இடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களது வரிசையில் சைலண்டாக இருக்கும் அதிகளவில் பேசப்படாத மற்ற டாப் 3 பிக் பாஸ் ஃபைனலிஸ்ட்களான பவித்ரா, ரயான் மற்றும் விஷால் ஆகியோர் முறையே ரயான் 5ஆவது இடம், பவித்ரா 4ஆவது இடம் மற்றும் விஷால் 3ஆவது இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி இல்லை என்றால் ரயான் 5ஆவது இடம். பவித்ரா 3 ஆவது இடம், விஷால் 4ஆவது இடம் பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!