Published : Jan 18, 2025, 02:28 PM ISTUpdated : Jan 18, 2025, 02:30 PM IST
நடிகர் ரவி மோகன், தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் 'ஜெயம்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களால், ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார். 22 வருடங்களாக ஜெயம் ரவி என்றே அடையாளப்படுத்தி கொண்ட ரவி, 2025 ஆம் ஆண்டு பெயரை அதிரடியாக மாற்ற போவதாக அறிவித்த இவர் இனி தன்னை ரசிகர்கள் அனைவரும் ரவி மோகன் என்று அழைக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார்.
24
Jayam Ravi And Aarti
தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாக அறிவித்த ரவி மோகன், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தன்னுடைய அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். ரவி மோகன் வாழ்க்கையில் தற்போது அடுத்தடுத்து பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு இவர் தொடர்ந்த வழக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்க்கனவே இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், ரவி - ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி ஏற்கனவே இவர்கள் இருவரும் சமரச தீவுக்காக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது தோல்வியில் முடிந்தது. கடந்த மாதம் நடந்த விசாரணையில், மத்தியஸ்தர் தரப்பில் இருந்து இன்னும் இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தை நடந்து முடியவில்லை என கூறப்பட்டது.
44
Ravi Mohan Divorce Latest update
இவர்களின் விவாகரத்து விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி சமரச பேச்சு வார்த்தையை நிறைவு செய்த பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறி ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கை, பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.