பொன்னியின் செல்வன் புகழ் ஐஸ்வர்யா லட்சுமி - விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி

First Published Nov 3, 2022, 5:06 PM IST

படம் டிசம்பரில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலின் மூன்றாவது விளையாட்டு சம்பந்தமான படம் இதுவாகும்.

GattaKusthi

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் எப் ஐ ஆர் படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். 

GattaKusthi

அந்த படத்தின் முதல் பார்வை ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாம் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பட குழு இன்று வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பெயர் பிரபலம் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...

GattaKusthi

இந்த படம் தமிழில் கட்டா குஸ்தி என்றும் தெலுங்கில் மாட்டி குத்து என்ற பெயரிலும் வெளியாகி உள்ளது. செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்டி டீம்வொர்க்ஸ் பேனரின் கீழ் ரவி தேஜாவுடன் இணைந்து விஷ்ணு விஷால் தயாரித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் விஷ்ணு விஷால் மல்யுத்த வீரர் போல வேடமிட்டு காட்சியளித்தார். இதன் இரண்டாவது இரண்டாவது போஸ்டரில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இடம்பெற்றுள்ளனர். இருவரும் மணக்கோலத்தில் இருக்கின்றனர். 

GattaKusthi

இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் டிசம்பரில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலின் மூன்றாவது விளையாட்டு சம்பந்தமான படம் இதுவாகும்.

click me!