விஷாலுக்கு மாஸ் வெற்றியை கொடுக்குமா மார்க் ஆண்டனி? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published : May 14, 2023, 11:37 AM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
14
விஷாலுக்கு மாஸ் வெற்றியை கொடுக்குமா மார்க் ஆண்டனி? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. திரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மற்றும் பிரபுதேவா நடித்த பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் மார்க் ஆண்டனி படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகி ரித்து வர்மா நடித்துள்ளார்.

24

மேலும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். டைம் டிராவலை மையமாக வைத்து பேண்டஸி படமாக மார்க் ஆண்டனி தயாராகி உள்ளது. விஷால் நடித்த எனிமி படத்தை தயாரித்த வினோத் தான் இப்படத்தையும் தனது மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... எனக்கு விவாகரத்து கொடுக்காம வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்துகிறார்- பிக்பாஸ் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்

34

மார்க் ஆண்டனி படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய்யை அவரது அலுவலகத்தில் சந்தித்த விஷால் உள்ளிட்ட மார்க் ஆண்டனி படக்குழுவினர் தங்கள் படத்தின் டீசரை நடிகர் விஜய்யிடம் போட்டுக்காட்டி அவரிடம் வாழ்த்து பெற்றனர். நேற்றுடன் நடிகர் விஷாலின் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு அவருக்காக கேக் வெட்டி பிரியா விடை கொடுத்துள்ளது படக்குழு. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

44

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை மாதம் 28-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவிய நிலையில், மார்க் ஆண்டனி படத்தை அவர் மலைபோல் நம்பி உள்ளார். இப்படம் மாஸ் வெற்றியை கொடுத்து விஷாலுக்கு கம்பேக் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் அதகளம் செய்த நடிகைகளின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories