எனக்கு விவாகரத்து கொடுக்காம வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்துகிறார்- பிக்பாஸ் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்

First Published | May 14, 2023, 10:38 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சரவணன், தன்னை ஏமாற்றி விட்டதாக அவரது மனைவி சூர்யா ஸ்ரீ பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

90களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்தவர் சரவணன். ஹீரோவாக சோபிக்க முடியாததால் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சரவணனுக்கு பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்திருந்தார் சரவணன். அப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடி கலாட்டா இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த சரவணன், கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில், அவர் தான் இளம் வயதில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் என பேசியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, அவரை பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றினர். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள சரவணன், அண்மையில் தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங் ஏரியாவை சிலர் அபகரிப்பு செய்வதாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் அதகளம் செய்த நடிகைகளின் லிஸ்ட் இதோ

இதனையடுத்து சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனுவை அளித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனது நகைகளை விற்று வாங்கிய வீட்டில் இருந்து தன்னையே சரவணன் வெளியேற சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார்.

என்னை காதலித்து திருமணம் செய்த சரவணனை பருத்திவீரன் படத்துக்கு முன்பு வரை நான் தான் சம்பாதித்து அவரை பார்த்துக்கொண்டேன். இப்போ எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு பங்கு ஏதும் இல்லை. நான் சம்பாதித்து அவர் பெயரில் வாங்கினேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தப்பு. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சரவணன் தான் காரணம் என சூர்யா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... புது பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்... லிப்லாக் கிஸ் கொடுத்து வாழ்த்திய கணவர் - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!