தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து புது கெட் அப்பிற்கும் மாறி உள்ளார் சிம்பு.
இப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. சிம்புவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும் என தெரிகிறது. எஸ்.டி.ஆர் 48 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளது. இதில் சிம்புவுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதையும் படியுங்கள்... பருத்திவீரன் கெட்டப்பில் ஆர்யா மிரட்டும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அந்த வகையில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் ஹீரோயின் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக்கூட்டணி உறுதியானால் தீபிகா படுகோனே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தீபிகா படுகோனே இதற்கு முன்னர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பதான். அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து தீபிகா படுகோனே நடிப்பில் தற்போது புராஜெக்ட் கே திரைப்படம் தயாராகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் அவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2 படம் குறித்து வெளியான ஹாட் அப்டேட்!