நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா நீண்டகாலம் காதலித்து வந்தனர். எனினும், இதனை அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருந்தனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக காணப்பட்டனர். இருதரப்புமே இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இன்று டெல்லியில் உள்ள கபுர்தலா மகாராஜாவின் முன்னாள் இல்லமான கபுர்தலா இல்லத்தில் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி எம்பி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளின் நண்பர்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா டெல்லிக்கு வந்து கபுர்தலா இல்லத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். நடிகை பரினீதி சோப்ரா, நடிகை ப்ரியங்கா சோப்ராவின் அத்தை மகள் ஆவார்.
மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்தனர். வெள்ளை நிற ஆடையில் ஜோடி தோன்றினர். இதற்கு பதிலாக திரையுலகினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.